தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்: தேவையில்லை தனியார் மயம்

20250730045823143.jpg

மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி தங்கள் பொறுப்புகளை தவிர்ப்பதற்காக அரசுத் துறையில் தனியார் நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு உதாரணம் தூய்மை பணியாளர்கள் திட்டம். படிக்கும் வாய்ப்பு வசதி இல்லாத ஏழை மக்கள் தூய்மைப் பணி போன்ற அரசுப் பணிகளில் சேர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பணிக்கு உத்திரவாதம் கிடைத்தது. ஆனால் இப்போது தனியார் மயமாக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி உத்திரவாதம் என்பது கேள்விக்குறிதான். அதேபோல் ஊதியமும் சொல்லிக் கொள்கிறார் போல் இருக்காது. வேலை நேரம் , குறித்த நேரத்தில் ஊதியம் இதெல்லாம் அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.

இப்படி தனியார் மயமாக்குவது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று தெரிந்தும் தமிழக அரசு தற்சமயம் சென்னை கோவை சேலம் மாநகரங்களில் குடிநீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வரத் தொடங்கி இருக்கிறது. இது தவறான அணுகுமுறை என்பது தான் உண்மை.

மக்களின் அத்தியாவசியம் தேவையான மின்சாரம்,குடிநீர், ரேஷன் போன்றவற்றை தங்கள் வசம் தான் வைத்திருப்பது நல்லது. மக்களுக்கும் அதுதான் வசதியும் கூட.

தனியார் மயம் என்பது பல குழப்பங்களுக்கு வழிவகுக்மே தவிர பிரச்சனையை தீர்க்காது. இதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.