
அரசியல் கட்சி பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி ஐம்பதாயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு காப்புத் தொகையாக 20 லட்சம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5000 முதல் 10000 வரை என்றால் ஒரு லட்சம், 10000 முதல் 20000 பேர் வரை 3 லட்சம், 20000 முதல் 50,000 என்றால் 8 லட்சம் இப்படி இருபது லட்சம் வரை காப்பு தொகை செலுத்த வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அந்தக் கட்சி தன்னர்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். .இதேபோல் முன் அனுமதிக்கு பத்து நாட்களுக்கு முன்பு 15 நாட்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு மனு அளிக்க வேண்டும். இப்படிப் பல கட்டுப்பாடுகளை பரிந்துரை செய்திருக்கிறது. .
தமிழக வெற்றி கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் 41 பேர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நெறிமுறைகளை வகுக்க சமீபத்தில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் இருக்கின்றன.
ரோடு ஷோக்கள் கூடாது என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த பரிந்துரைகளையும் ஏற்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.
எல்லா அரசியல் கட்சிகளும் பொருளாதார ரீதியாக வசதியாக தான்இருக்கின்றன. பொதுக் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யும் போது இந்த காப்புத்தொகை அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. எனவே எல்லா அரசியல் கட்சிகளும் இந்த பரிந்துரையை அப்படியே ஏற்பது தான் நல்லது.
சென்னை அண்ணா மேம்பாலத்தில் விதிகளை மீறி ஆளுங்கட்சியினரே கொடிகளை போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த நெறிமுறைகளை ஒழுங்காக அரசியல் கட்சியில் கடைபிடிக்க வேண்டும். கட் அவுட் வைக்க மாட்டோம் என்று பிரமாண பத்திரமே உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்தது. ஆனால் இன்று அதிக கட் அவுட்டுகள் வைப்பதே ஆளுங்கட்சியான திமுக தான். திமுக அரசு தான் இந்த நெறிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவர்களே இதை மீறாமல் மற்ற கட்சிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Leave a comment
Upload