
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுப்பது சம்பந்தப்பட்ட வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மாநில ஆளுநர் அதிகாரம், குடியரசுத் தலைவர் அதிகாரம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆளுநருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் சில உத்தரவுகளை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். .
குடியரசுத் தலைவர் தனக்கே எல்லா அதிகாரம் என்று எல்லாம் முடிவு செய்யாமல் அவசரப்படாமல் நிதானமாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளதா என்பதை விளக்குமாறு 14 கேள்விகளை கேட்டிருந்தார் ஜனாதிபதி. இதை ஆலோசனையாக சொல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நானே எல்லாம் என்ற தொனியில் குடியரசுத் தலைவரின் கடிதம் இல்லை. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. .
ஆளுநரைப் பொருத்தவரை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் மூன்று வாய்ப்புகள். 1 . மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் 2. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். 3. மசோதாவை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைக்கும் போது அந்த மசோதாவை மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை .அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று இந்த அமர்வு குறிப்பிட்டிருக்கிறது.
மசோதாவை ஏற்பதில் மாநில அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகளை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆளுநர் அல்லது ஜனாதிபதிக்கான காலக்கெடுவை நீதித்துறை ரீதியாக நிர்ணயிப்பது பொருத்தம் அற்றது. ஆளுநரின் ஒப்புதலை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்
இது எங்களுக்கு சாதகமானது தான் என்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் சாதக பாதகம் என்ற கேள்வி எழவில்லை. மக்கள் நலன் சார்ந்து மசோதாக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. குறிப்பாக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் காலதாமதத்தால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்த போக்கு மாற வேண்டும். இருவரும் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கௌரவம் பார்க்கக்கூடாது. .

Leave a comment
Upload