தொடர்கள்
பொது
பகவான் ஸ்ரீதர்ம சாஸ்தாவின்  பரிவாரங்கள் - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20251021224624487.jpg

61 மாடன்கள்

மாடன்களிலேயே 61 மாடன்கள் உள்ளனர். அவர்கள் முறையே :

அருவா மாடன் அத்தி மாடன்

அகழி மாடன் அகனி மாடன்

அடுப்படி மாடன் அன்ன மாடன்

அரிமுத்து மாடன் அரகுல மாடன்

அரையடி மாடன் அரசடி மாடன்

ஆண்டி மாடன் ஆவேச மாடன்

ஆகாச மாடன் ஆலடி மாடன்

இசக்கி மாடன் ஈன மாடன்

ஈன முத்து மாடன் உடுக்கை மாடன்

உறி மாடன் உதிர மாடன்

ஊசிக்காட்டு மாடன் எச மாடன்

ஏறு மாடன் ஒளிமுத்து மாடன்

ஒய்யார மாடன் ஓங்கார மாடன்

கச மாடன் கரடி மாடன்

சக்தி மாடன் சிவ மாடன்

பன்றி மாடன் பரன் மாடன்

படித்துறை மாடன் தேரடி மாடன்

குளக்கரை மாடன் கிணத்தடி மாடன்

வேம்படி மாடன் பனையடி மாடன்

மடையடி மாடன் கரையடி மாடன்

செக்கடி மாடன் தெப்பக்குளத்து மாடன்

வயக்கரை மாடன் வாழைமரத்தடி மாடன்

சுடுகாட்டு மாடன் நடுக்காட்டு மாடன்

நல்ல மாடன் வண்டி மாடன்

முச்சந்தி மாடன் சந்தையடி மாடன்

வண்ணார மாடன் வெள்ளாவி மாடன்

அணைக்கரை மாடன் சப்பாணி மாடன்

கொம்பு மாடன் கொடிமரத்து மாடன்

தூசிமுத்து மாடன் குதிர மாடன்

பிச்சப்பூ மாடன் பூக்குழி மாடன்

பேச்சி மாடன்

மேற்சொன்ன 61 மாடன்கள் தவிர தக்ஷராஜன் தளவாய் மாடனாகவும் புலையன் மகன் புல மாடனாகவும் உள்ளனர்.

108 கருப்பசாமிகள்

கருப்பசாமிகளிலேயே 108 கருப்பசாமிகள் உள்ளனர். அவர்கள் முறையே

கருப்பண்ணசாமி முன்னோடி கருப்பசாமி

பெரிய கருப்பசாமி சின்ன கருப்பசாமி

சந்தன கருப்பசாமி முப்புலி கருப்பசாமி

மாசாண கருப்பசாமி ஆகாய கருப்பசாமி

பாரி கருப்பசாமி பதினெட்டாம்படி கருப்பசாமி

பிலாவடி கருப்பசாமி முத்து கருப்பசாமி

உத்திர கருப்பசாமி ஒண்டி கருப்பசாமி

நொண்டி கருப்பசாமி சோனை கருப்பசாமி

சப்பாணி கருப்பசாமி சமய கருப்பசாமி

கரந்தமலை கருப்பசாமி கோட்டை கருப்பசாமி

வேட்டை கருப்பசாமி கனவாய் கருப்பசாமி

புனுகு கருப்பசாமி மாரநாட்டு கருப்பசாமி

சங்கிலி கருப்பசாமி மாட கருப்பசாமி

ஆண்டி கருப்பசாமி மாரடி கருப்பசாமி

தேரடி கருப்பசாமி வீரடி கருப்பசாமி

பேய் கருப்பசாமி மலையாள கருப்பசாமி

கரையடி கருப்பசாமி சிங்க கருப்பசாமி

காங்கேயம் கருப்பசாமி பொட்டல் கருப்பசாமி

பூமாலை கருப்பசாமி பூதநாயகா கருப்பசாமி

வெள்ளை கருப்பசாமி பாறை கருப்பசாமி

தாணிப்பாறை கருப்பசாமி மாயாண்டி கருப்பசாமி

மடபுரம் கருப்பசாமி எல்லை கருப்பசாமி

வாழையடி கருப்பசாமி நாட்டுக்கோட்டை கருப்பசாமி

நல்லண்ண கருப்பசாமி தேனருவி கருப்பசாமி

அடைகாக்கும் கருப்பசாமி பணங்ககாட்டு கருப்பசாமி

வல்லைய கருப்பசாமி பச்சைமலை கருப்பசாமி

அருவிக்கரை கருப்பசாமி மஞ்சமலை கருப்பசாமி

ஆனைமலை கருப்பசாமி ஓங்கார கருப்பசாமி

பாதாள கருப்பசாமி உரிமடத்துயடி கருப்பசாமி

மாங்காடு கருப்பசாமி கருமாத்தூர் கருப்பசாமி

கச்சை கருப்பசாமி சண்டபிரசண்ட கருப்பசாமி

வல்லடி கருப்பசாமி காட்டு கருப்பசாமி

வளைங்குளம் கருப்பசாமி கன்னிமார்காவல் கருப்பசாமி

அன்பு கருப்பசாமி அமுத கருப்பசாமி

வேலங்குடி கருப்பசாமி ஆங்கார கருப்பசாமி

ஒண்டிபிலி கருப்பசாமி சாம்பிராணி கருப்பசாமி

அழங்கார கருப்பசாமி அழகுமுத்து கருப்பசாமி

மலையடி கருப்பசாமி அழகு கருப்பசாமி

தோப்பு கருப்பசாமி வேப்படி கருப்பசாமி

குடல்வெட்டி கருப்பசாமி மேலமடை கருப்பசாமி

வள்ளக்காட்டு கருப்பசாமி வல்லநாட்டு கருப்பசாமி

வட்டமலை கருப்பசாமி வழிவிடும் கருப்பசாமி

பனையடி கருப்பசாமி வானரமுட்டி கருப்பசாமி

கிராம கருப்பசாமி கிளிக்கூண்டு கருப்பசாமி

ஈசாண கருப்பசாமி ரணவீரன் கருப்பசாமி

கருங்காலி கருப்பசாமி மச்சை கருப்பசாமி

சூர கருப்பசாமி பால கருப்பசாமி

பேயாண்டி விலயாட்டு

கருப்பசாமி பாலையத்து கருப்பசாமி

மஞ்சன கருப்பசாமி அகோர கருப்பசாமி

மளுவேந்தி கருப்பசாமி கொக்குவெட்டி கருப்பசாமி

வன்னிக் கருப்பசாமி குருவிகுளம் கருப்பசாமி

முன்னோடை கருப்பசாமி மீனமலை கருப்பசாமி

கொல்லிமலை கருப்பசாமி கொம்படி கருப்பசாமி

சடைமுடி கருப்பசாமி சிவன்மலை கருப்பசாமி

மேலே கூறப்பட்டுள்ள 108 கருப்பசாமிகள் தவிர ஸ்ரீமுத்து கருப்பையா சாமி என்று ஒரு கருப்பசாமி உள்ளார்.

மணிதாசரின் பாடல்களில் பகவானது பரிவாரங்கள்

“கோட்டை தலைமலையான் குண்டாந்தடி பூதம்

நாட்டை வளம் செய்யும் நல்லவனும் வன்னியனும்

சாட்டை எடுத்து வீசும் சாமுண்டி வேதாளம்

ஆட்டமதை நோக்கி வரும் ஆரியங்காவையாவே…….”

“இண்டல பிள்ளையும் காஞ்சர பூதமும்

வெறிக்கல் யக்ஷிமுதல் வீரன் கங்காணியும்

சண்ட சாமுண்டியும் சரகுருட்டியும்

இண்டமலயான் முதல் இன்பமாய் விளையாடி………”

“வேதாள கூளியும் பாதாள யக்ஷியும்

தலை சுற்றியாடி வரவே சப்தங்களிட்டு வரும்

தண்டவாய் முண்டனும் தலையெடுத்து தோடி வரவே

ரக்த சாமுண்டியும், ரண காளிகூளியும்

தம்ஷட்ரங்கள் ஓசையுடனே கரடி கடுவா புலி

கலந்து விளையாடி வரும் காந்தமலை நாதனழகும்

கண்ட கோதண்டப்ரசண்ட உத்தண்டரான

வீரமணிகண்டர் முன் வெறிக்கலி பகர்ந்து களிக்கின்றாளே”

“வெள்ளைக்கல் பூதமுடன் மந்திரி செல்லப்பிள்ளை

வெண்கவரி வீசிவரவே வெண்ணிற சாவலன்

கண்யமுடன் அருகினில் வெண்குடை பிடித்துவரவே

துள்ளிவரும் இண்டலயன் சரகுருட்டியும் கட்டியம்

கூறிவரவே துய்ய பரிபூரணானந்த ஹரிஹர தனயன்

மெய்யனிவர் பவனி வரவு பாரீர்”

“ஆங்கஜன் செல்லப்பிள்ளை அம்மை வெறிக்கல் யக்ஷி

அனைவரும் ஸ்துதிக்க, சாக்ஷி வெள்லைக்கல் பூதம்

சரகுருட்டி முருகன் தயவுடன் நடக்க சல்லை சொல்லும்

மாடனும் சங்கிலி பூதத்தானும் ஸ்வாமி முன் குதித்த

ஸ்வாமி வாரார் என்று காமிகளெல்லாம் ஆரத்தி எடுக்க”

“பட்டவராயன் வந்து களிக்க

யக்ஷி பாவாடை வீசி பன்னீர் தெளிக்க

கட்டியங்காரன் களிக்க

ஏழு கன்னிமார் கூடி கதளிகுறிக்க”

வீரமணிகண்டர் பரிமேல் விளங்கவே

வெள்ளக்கல் பூதம் முன் நடக்கவே

சூரனாகிய சாவலன் முதல்

ஸுமதி செல்லப்பிள்ளை முன் நடக்கவே

போரில் திடமுள்ள பூதத்தான் முதல்

போற்றும் தலைமலையானும் புகழவே…”

“பூதத்தான் செல்லப்பிள்ளை சாவலன்

பெருந்தும் வெற்றிகொள் பெரிய மாடனும்

மாடத்தான் பேச்சி சரகுருட்டியும்

வன்னியனும் சூழவே ஸ்துதி

திண்டலய்யன் கட்டியம் கூற

துள்ளிய வேதாளம் குடை பிடிக்க….”

“சிங்கநாடன் பகடன் சிகப்பு வெறிக்கல் யக்ஷி

பங்காமில்லாதடியன் பலவேசன் முனியனும்

எங்கும் த்வனி முழங்கும் இடமலைக்கருப்பனும்

சங்கிலி மாடனுடன்…….”

“மாடன் இருளன் வன்னியன் வளர் பூதராயனும்

தேடிவரும் மைக்காளி செஞ்சடை மாகாளியும்

பாடிக்கொலுவில் வரும் பகடயன் தவசியும்…”

“வெள்ளைக்கல் இண்டலயன் செல்லப்பிள்ளையுடனே

வேதாளம் பகடைய்யன் வீர பைரவனுடன்

அள்ளிச்சந்தனம் பூசி அன்பாய் களித்துவரும்….”

“ வெள்ளக்கல் பூதம் வேதாளம் மெத்த

வெறிகொண்ட தடிமாடன் சங்கிலிபூதம்

பாதாளன் வழி சரகுருட்டி பூத பைரவன்

இசக்கியும் செல்லப்பிள்ளையுடனே….”

“பெரியனும் இருளனும் சடியனும் சாமிண்டி

முதலான பூதங்கள் ஓடி வரவே

அபயமிட்டோடி வரும் ஐயன் விதாரியும்

அலரி வரும் காளியுடனே….”

வாசல் ப்ரதானியாய் ஆவேசரங்கம் செய்து

வருகின்றவன் கருப்பன் தண்டலதிபன் தலைவன்

இண்டலயன் அண்டையில் சட்டமிடு

திட்டமுடையோன் சாடிவரும் காற்றாடி

ஆடுறிஞ்சி முத்தன் காடு வெட்டிகளுக்கூட

துண்டரீக தலைவரென்ற செல்லப்பிள்ளை

சுமோதி முன்னோடி வருவார்….”

“ஆரியன் பட்டரணவீரன் உடைவாள் கொண்டு

அகம்படி பிடித்து வருவார் பாதாளபூதம்

எதிர் சூதாளி சாவலன் பட்டகசன் காப்பவன்

பேர்வந்த ரண நீலகண்டன் இருளன்

அண்டையில் பலவேசி லாடதவசி

வாதாடும் வன்னியன் தூதோடவன்

சுடலை மாடனும் கூட வருவார்

மந்திர மூர்த்தித் தலைவனும்….”

“வெஞ்சிலை பூதம் எதிரேற்று கட்டியம் கூற

வேதாளம் குடை பிடிக்க பிறகில் ஸுந்தர யக்ஷியும்

முல்லைக் குமாரியும் வெண்சாமரங்கள் வீச

அஞ்சாத ரணவெறியன் அடப்பம் கட்ட

அசனி காளாஞ்சி ஏந்த…”

“துங்கரண சிங்கனும் செங்கனக சங்கிலித்தோளனும்

காளிதளவாய் துஷ்டரை விரட்டு மரியோட்டு

காட்டாரியன் முன்னோட்டு பட்டராயன்

சங்கம் சுருட்டி முருகன் சரகுருட்டியும்…..”

“முத்தயன் காத்தவராயன் துய்ய பாதாள பைரவன்

கடுஞ்சடை பூதம் மாடன் பெரும்படை பூதம் வீரன்

இருளப்பன் கருப்பண்ணன் நீரடிபூதம் ஆலவட்டம்

குடை பிடிக்க கூடகுட்டையன் செல்லப்பிள்ளை……”

“வெகு தாஷ்ட்ரிய பரிவாரக்கூட்டம் மணிதாசன்

இவர்களுக்கு சொந்த தேட்டன் அவர்வேட்டைக்கு

ஒருவன் வெள்ளிக்கோட்ட தலமலையான் வெள்ளக்கல்

பூதம் செல்லப்பிள்ளை ஒருத்தன் அச்சன் மேட்டுக்கருப்பன்

வழி காட்டும் சங்கிலி பூதம் வெறிக்கல் யக்ஷியை….”

“சபரிமலைவாசன் சரகுருட்டியுடன்

சாமுண்டி வேதாளம் சல்லியனுடனே

சடையன் சுடலைமுத்து சாவலுடனே

சங்கிலி பூதத்தான் சாவித்தாடியே….”

“பாதாள பூத மன்னேரம் ஸன்னதிபோய்

படி விளக்குயுமெடுக்க

ஸ்வந்த பட்டவராயன் கையில் உடைவாள்

கறுப்பன் ஆடவம் கட்டிச் சுருள்கொடுக்க

மெய்த்த வாதுக்காரன் வீரபதரன் வழிவிலக்க

வானெட்டும் வேதாளம் வரிசை குடைபிடிக்க

மாதுபூர்ண புஷ்கலை நாதன்….”

“வேட்டைக்கொரு மகன் வெள்ளைக்கல்பூதம்

புஜம் தட்டி விருது கட்டியம் கூற

ரத்த பெறுக்கண்ணால் இசக்கி பீருட்டதரும்

காலில் விலங்கும் ஓசைகள் மீற மெய்த்த

தோட்டத்தல மலையான் நாட்டபைரவன்

கையில் கொடுவாள் பிடித்து சந்தியிடி முழங்கும் போல

சாட்டை முருகன் முன்சாடும் சங்கிலித்தோழன்

ஸன்னிதியில் முன்னாடி தளவாய் உன்னிவர….”

“அண்டர்முனிவர்கள் அமரர் ஸ்துதிக்க

முன்னாடியே பெரிய மாடனுதிக்க

வண்டந்துணை சின்ன மாடன் குதிக்க

விண்மாதர் நடனங்கள் கீதம் கதிக்க

பொர்த்தண்டமணி நல்லமாடன் எதிர்க்க

பஹூகாராளப்படி வெண்குடைபிடிக்க……”

“காடிக்கல் யக்ஷி கறுப்பனுடன் இதோ

காஞ்சர பூதமும் கருநாக யக்ஷியும்….”

“சின்னம் சிவிணஞ்சி சேரு மாடன் கருப்பன்

வண்ணார மாடன் முத்து வீரன் சுடலையாண்டி

கன்னகமறு குளத்தூர் காவுமாடன் வெறியன்

எண்ணாயிரம் தேவர்கள் ஒன்றாய் சேர்ந்துவர

நல்ல மாடன் வெறியன் வல்லிடும்பன் கடம்பன்

நாட்டோர்புகளும் நல்ல ஒட்டக்காரன் தளவாய்

உல்லாசமாக நல்ல உயர்ந்த சல்லடை மாட்டி

ஸல்லாபமாகி வரும் சங்கிலிமாடனுன்……”

“சிங்கநாதன் இருளன் வெள்ளக்கல் பூதம்

சங்கிலி பூதத்தான் கறுப்பன் பூபாலன்

காலாளர் இசைக்க வர்க்கலை யக்ஷ துர்கை………”

மணிதாசர், பகவானுடைய பரிவாரங்களின் நாமாக்களைச் சொல்லி பாடப்பாட எல்லா நாமாக்களையும் கூற முடியாமல் கடைசியில் “எத்தனையோ பரிவார ஸமூகங்கள் நித்யமும் உன்னைப் பணிந்திடவே” என்றும் “பரிவார ஸகலரும்” என்று எல்லோரையும் நினைவு கூறுகிறார்.