தொடர்கள்
வலையங்கம்
அலட்சியம் வேண்டாம்

20251106075719886.jpeg

சென்ற வாரம் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்டதில் இறந்து போன 11 பேரும், இந்த 18 பேரில் அடங்கும். இது தவிர 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த விபத்திற்கு காரணம் அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியம் தான் என்கிறார்கள்.

சமீபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் சமாளித்து பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார். இந்த மாரடைப்பு சம்பவம் தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அடிக்கடி நடக்கிறது.

சாலை விதிகளை மதிக்காமல் இருப்பது பேருந்துகள் சரிவர பராமரிக்காமல் இருப்பது ஓட்டுனர்களுக்கான பணப்பட்டுவாடா மாத ஊதியம் இவையெல்லாம் அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காதது இப்படி விபத்துக்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்து நடப்பதை இந்த அரசு கவனிக்க வேண்டும். இதில் அலட்சியம் கூடாது. ஓட்டுனர்களுக்கு வாகனம் ஓட்டும்போது எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை அடிக்கடி மருத்துவ பரிசோதனை அவர்களின் கோரிக்கையில் கவனம் இதெல்லாம் தான் அரசு பேருந்து விபத்துகளை தவிர்க்க இந்த அரசு செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்.

இதேபோல் இருசக்கர வாகன விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. 2023 -இல் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் தமிழகம் 11,490 உயிரிழப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. 45.8% இருசக்கர வாகன விபத்துக்கள். இதற்கு காரணம் போதையில் ஓட்டுவது சரியான சாலை வசதி இல்லை என்பதுதான். இவை இரண்டுக்கும் காரணம் அரசாங்கம் தான். . வாகன ஓட்டிகளும் மனித உயிர் எவ்வளவு முக்கியம் அவர்கள் குடும்பம் பொறுப்பு இவற்றை உணர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு