தொடர்கள்
தொடர்கள்
சுளீர் சொர்ணாக்கா!

20180425184927762.jpeg

செய்தி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் கொடூரம் மெதுவாக ஓய்ந்து நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. சீக்கிரமே அமைதி திரும்பிவிடும்! - புது கலெக்டர் நம்பிக்கை.

சுளீர்: அப்ப நாங்க என்ன பண்றது... எங்க ஏரியால புதுசா டார்ச்லைட் கம்பெனி ஒண்ணு திறந்திருக்காங்க. அதை மூடச் சொல்லி அடுத்து களத்துல இறங்குவோம்னு சில அரசியல்வாதிங்க கிளம்பாம இருக்கணும்!

செய்தி: திட்டமிட்டு குறி பார்த்து சுட்டார்கள். இது எடப்பாடியின் சூழ்ச்சி! அரசின் சதி! - தொலைக்காட்சி மாலை நேர விவாதத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

சுளீர்: எடப்பாடியின் நாற்காலியைக் குறிபார்த்துதான் சுடறார்... ஆனாலும் ஸ்டாலினின் குண்டு வீணாகிறதே!

செய்தி: அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை காங்கிரஸ் எப்படி சமாளிக்கப் போகிறதோ என தெரியவில்லை... நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. கட்சி நிர்வாகிகளுக்கு சில இடங்களில் பயணச் செலவுக்குப் பணம் தரவில்லை. தேநீர் வழங்குவதுகூட நிறுத்தப்பட்டுள்ளது!

சுளீர்: சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸைக் கலைச்சிடலாம்னு காந்தி சொன்னாராம்! அதை வரும் தேர்தலுக்குப் பின்னாடி இவங்க செஞ்சு காட்டிடுவாங்களோ!

செய்தி: பெசன்ட் நகரில் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப், செல்போன் திருட வந்தவனைப் பார்த்து எஜமானி ஜெயந்தி ஓவென கூச்சல் போட்டார். செய்வதறியாது திகைத்த திருடனைப் பலரும் வந்து பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

சுளீர்: ஜெயந்தியின் கணவர் இதைப் பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூச்சல் அவருக்குப் பழகியிருந்தது!

செய்தி: இருட்டு அறையில் முரட்டுக் குத்து... சினிமாவின் இரண்டாம் பாகம் தயாரிக்க முடிவு.

சுளீர்: அவங்களுக்கு என்னதான் பிரச்னை? ஒரு மெழுகுவத்தியாவது ஏத்தி வெச்சிருக்கலாமே!

- ஆதியோகி சிவா