தொடர்கள்
அழகு
அழகு : "ஆறு வயதில் ஸ்ரீமத்பகவத் கீதை" - பால்கி

20260401123307415.jpeg

ஆறு வயதில் சமஸ்கிருதம் அறிந்த சான்றோர் மத்தியில் அவர்களது வினாக்களுக்கேற்ப - அதாவது பத்தியின் முதல் வார்த்தை கூற அந்த வார்த்தை முதலாக வரும் கீதையின் பத்தியை சட்டென பளிச்சென ஒப்புவித்தல் என்பது ஒரு அரிய செயல்.

என்ன அழகு!!!!!.

வைஷ்ணவி, 6 வயது சிறுமி. ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள 700 ஸ்லோகங்கள் அனைத்தையும் இவள் மனப்பாடம் செய்திருக்கிறாள். சமஸ்கிருதப் பண்டிதர்கள் மல்லு கட்டிக்கொண்டு சோதிக்க படாத பாடு படுகின்றனர். அனத சிறுமியோ ஒரு பயமும் அறியாமல் எந்த ஸ்லோகத்தைக் கேட்டாலும், அதை இவள் முழுமையாகச் சொல்லி முடித்துவிடுகிறாள். இச்சிறுமி பகவத் கீதை ஸ்லோகங்களை உச்சரிக்கும் விதமும் அற்புதம்.

இதோ அந்த வீடியோ.