தொடர்கள்
விளையாட்டு
Ball வடியும் "பால"கன் - வைபவக்கு இன்னொரு கட்டுரை - பால்கி

20260430085433750.jpeg

எனது நண்பரிடம் வைபவ் சூரியவாண்ஷியைப் பற்றி சொல்லச் சொல்ல, அவன் சொன்னது இது தான்.

“இவன் ஆடும்போது பீல்டர்களுக்கு வேலையே இல்லை.

பௌலர் அம்புட்டு தெய்வங்களையும் மனஸ்ல ஏத்தி உருவேத்தி க்ரீஸுக்குக்கிட்டவந்து போடறது தான் தெரிது. பீல்டர்களுக்கு ஒரு ஐடியாவுமே இல்லை. பந்து ஆகாய மார்க்கமா போச்சா தங்களோட அக்கம்பக்கத்லியோ காலுக்குநடூவ்லியோ போச்சாண்ணே தெரியல.

பீல்ட் பண்றதுல்லாம் பௌண்டரி லைனுக்கு அப்பால பந்து பொறுக்கிபோடுற பசங்க இல்லைனாக்கா அந்த காலரியில் உட்கார்ந்திருக்கும்ரசிகர்கள்.

அவன் அடிச்ச பந்தை அடுத்த பால் பௌலிங் போடுறதுக்கு அந்த பௌலரிடம் சேர்ப்பிப்பது அந்த ரசிகர்களும் அந்த பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களும்தான்.

கன்னத்தில் முத்தமிட்டால் நிலை தடுமாறும்.

இங்கோ மட்டையில் முத்தமிட்ட பந்து வெட்கத்தின் மிகுதியால் வேகமாய்பறக்கின்றனவே.

27 மே 2026 அன்று நடந்த எலிமினேட்டர் மேட்ச்சே சாட்சி.

எவ்வளவு சொன்னாலும் குறைவுதான்.

அவன்கிட்ட பௌலர்கள் ஒத வாங்குனாங்களோ இல்லியோ பாவம் அந்தபந்துகள் இவனிடம் பட்ட அடிகள்ள ரணகளமாப்போயிருக்கும் அத்தோடஒடம்பு. தையல் பிறிஞ்சிருக்கும். தையல் போட வேண்டியிர்க்கும்.

வைபவனின் வைபோகமே.

சிக்ஸர் பௌண்டரி ரன்களின் வைபவமே”.

கிரிக்கெட் உலகின் மிகவும் அதிரடியான மட்டையாளர்களில் ஒருவரான இவர், கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான்கள் இதற்கு முன் தன்வசம் வைத்திருந்த, மிகப் பிரம்மாண்டமானதும் நீண்ட காலமாக நிலைத்திருந்ததுமான ஒருசாதனையை முறியடித்துள்ளார்.

ஒரு ஐபிஎல் சீசனில் (28.05.2026 வரை) கிறிஸ் கெய்ல் இது வரை வைத்திருந்த அதிக சிக்சர்களின் சாதனையை முறியடித்து 65 சிக்சர்களை அடித்துள்ளார்.

இது வரை 120 பௌண்டரி தாண்டுதலைசெய்துள்ளார். அதாவது 55 பௌண்டரிகளும் 65 சிக்சர்களும் அவர் இன்று வரை அடித்திருக்கும் 680 ரன்களில் அடக்கம். என்றால், 610 ரன்கள் அந்த வகையச் சேர்ந்தது. கிட்டத்தட்ட 90 % இந்த வகையோ.. அம்மாடி!!!!!.

இந்த 680 ரன்களும் வெறும் 280 பந்துகளிலேயே அடித்தது எனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 243% தானுங்க.

ப்ளேஆஃப் மேட்ச்சில் வேகமான 50 ரன்கள் என 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

பவர் ப்ளேவில் அதாவது, முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்பது இதுவரை டேவிட் வார்னரிடமிருந்ததை இவர் பறித்துள்ளார்.

13 வயதிலேயே ஐபிஎல் ஆட கான்ட்ராக்ட் பெற்றவர்.

14 வயதில் 38 பந்துகளில் 101 ரன்களைக் குவித்து சென்சுரி அடித்த இளவயதினன் ஆவார்.

அவரது பிறந்த தேதி : 27 மார்ச் 2011. பாலகன் தானே.

BALL வடியும் BAALAGAN.