
ஐபிஎல் தொடரில் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்னுடைய புயல் வேக பேட்டிங் திறமையினால் மெய்சிலிர்க்க வைத்துகொண்டிருக்கிறார் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கப் மிஸ்ஸானதிலிருந்து இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தனர்.

ராஜஸ்தான் ராயல் கிரிக்கெட் பேட்டிங் என்று வரும் போது அனைவரும் டிவியை ஆன் செய்துவிட்டு வழிமேல் விழி வைத்து அதன தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்தினை பார்த்து கனவுலகில் சஞ்சரிக்கின்றனர்.
எப்பேர்பட்ட பவுலர்கள் பந்துக்களும் நாலா திசைகளிலும் சிக்ஸ்ர்களும் ஃபோர்களும் பறக்கிறது.
தன் கூரிய பார்வையால் லாவகமாக தன் கால்களை பிரண்ட் புட் , பேக் புட் என்று அட்ஜெஸ்ட் செய்து தன் கையில் இருக்கும் பேட்டை சூறாவளியாய் சுழற்றி எதிரணியினர் பந்துக்களை எல்லைக்கோட்டிற்கு மேல் பறக்க விடும் பாலகன் வைபவ் சூர்யவன்ஷி.

இந்திய கிரிக்கெட் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தகாரரான கிருஷ்ணம்மசாரி ஸ்ரீகாந்த் இது போன்ற ஆட்டத்தினை தான் கண்டது இல்லை என்று மகிழ்ச்சி பொங்கி வர்ணிக்கிறார்.

வெஸ்ட் இண்டிஸ் கிரிஸ் கெய்ல் தன் சிக்ஸ்ர் ரிக்கார்டுகளை வைபவ் சூர்யவன்ஷி அடித்து முன்னேறி சாதனை படைத்துள்ளார் என்று பெருமைபட்டு இவருக்கு சிக்ஸ் மெஷின் என்று பட்டப்பெயர் வைத்து புகழ்கிறார்.
உண்மையச் சொல்லணும்னா, வைபவ் சூர்யவன்ஷியோட ஆட்டத்தை பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சரியம் தாங்கல, அப்படியே ஷாக் ஆகி நிக்கிறேன். என் வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு பிளேயரை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்ல. வாஹ்... என்ன ஒரு அசாத்தியமான பிளேயர். பிசிசிஐ-கிட்ட (BCCI) நான் வைக்கிற வேண்டுகோள் என்னன்னா, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இவருக்கு இந்திய அணியில வாய்ப்பு கொடுங்க என்று கிரிக்கெட் உலக வசிஷ்டர் சுனில் காவஸ்கர் பாராட்டி மகிழ்கிறார்.

உலக நெம்பர் ஓன் பவுலர் பேட் கமின்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்கள் பறக்க விட்டதை பார்த்து விக்கித்து வியர்த்து போய் அப்படியே நின்று விட்டார்.அடுத்து வைபவ் சூர்யவன்ஷி அவுட் ஆகும் வரை பேட் கமின்ஸ் பவுலிங் போடவே வரவில்லை. உலகின் நெம்பர் ஓன் பவுலர் பேட் கமின்ஸ் சைலன்ஸ் ஆகி விட்டார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்த பந்துவீச்சாளர் பந்து வீசுகிறார் என்ற கவலை இருந்ததே இல்லை, அவர் பந்தை மட்டுமே பார்ப்பார், பந்தை வீசுவது யார் என்பது எல்லாம் அவருக்கு தெரியாது.பந்தை லாவகமாக பவுண்ரிக்கு மேலே பறக்கவிடுவது தான் அவரது தாரக மந்திரம் அது தான் அவரது வெற்றி ரகசியம் .

தன் விளையாட்டை கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அறிந்த வைபவ் சூர்யவன்ஷி ஒரு புன்னகையுடன் மகிழ்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு எப்படி பந்து போடுவது என்று உலக பந்துவீச்சாளர்கள் வரும் காலத்தில் மாநாடு நடத்தி தீர்மானம் போடும் அளவிற்கு நடுங்கி போயுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழத இந்தியரான வைபவ் சூர்யவன்ஷி புறப்பட்டு விட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்தினை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது .

Leave a comment
Upload