தொடர்கள்
விகடகவியார்
கரப்பான்!!! சமாளிப்பாரா ???? - விகடகவியார்

நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதிலிருந்து தலைநகர் டில்லியில் சர்ச்சைகள் தொடங்கியது.20260624152146210.jpg

கல்வி அமைச்சர் தர்வேந்திர பிரதான் ராஜினாமா செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.

போராட்டம் தீவிரமடைந்த போது இதை சரியாக கையாளவில்லை என்று ஜூலை 17-ஆம் தேதி டெல்லி காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டார்.

ஜந்தர்மந்தரில் போராட்டம் தொடங்கியதில் இருந்து முதலில் கண்டு கொள்ளாத மத்திய அரசு இதற்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு பெரு குவதைப் பார்த்து முதல் முறையாக காக்ரோச் ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தார்கள்.

காக்ரோச் கட்சி செய்தி தொடர்பாளர்களான சௌரவ்தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டவை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு ஒரு கோடி நிவாரணம் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தான் காரணம்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல காவல் தடுப்புகளை தாண்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர் .

அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பான வழக்கமான பேட்டியை பிரதமர் மோடி நிகழ்த்தி கொண்டிருந்தார்.

அதில் இந்த போராட்டம் பற்றி எந்த குறிப்பு இல்லை.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் வெற்றிகரமான ராக்கெட் ஏவுதலை பாராட்டிய மோடி 28 வயது கொண்ட இளைஞர்களால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நான் 56 வயது இளைஞர் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று மறைமுகமாக ராகுல் காந்தியை சாடினார்.

காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தையோ மூன்று வாரங்களாக உண்ணாவிரதம் இருந்த வாங்சுங்கையோ மோடி அரசாங்கம் ஆரம்பத்தில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அந்த இயக்கம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியவும் அரசுக்கு பெரிய சவாலாக மாறிய போது வாங்சுக் காவல்துறையினால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற அவரது மனைவியின் கோரிக்கை ஆரம்பத்தில் ஏற்கப்படவில்லை.

போராட்டம் தீவிரமடைந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்களும் இளைஞர்களும் டெல்லி வந்து காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் வாங்சுக்குக்கு ஆதரவாகவும் வீதியில் இறங்கி போராடிய போது தான் நிலைமை மிகவும் தீவிரமடைகிறது என்பதை உணர்ந்து மத்திய அமைச்சர் ஜே .பி .நட்டா சந்திப்பு நடந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி என்ற முடிவுக்கு வந்ததும் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுநடவடிக்கையில் இறங்கினார்கள்.

பலர் படுகாயம் அடைந்தார்கள் போராட்டக்காரர்கள் போலீஸ் மீதும் அரசாங்கம் வன்முறையாளர்கள் என்று மாணவர்களை குற்றம் சுமத்தியும் மாறி மாறி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இப்போது பிரச்சனை காக்ரோச் ஜனதா கட்சியே வாங்சுக்கோ இல்லை.

இப்போது அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இது மக்கள் பிரச்சினையாக இப்போது மாறிவிட்டது.

இந்தியா முழுவதும் தெருக்களில் குவியும் மக்களை பாருங்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ராகுல் போராட்டம் நேர்மையற்றது என்று சோனம் வாங்சுக் மனைவி காட்டமகா கருத்து சொல்லி இருக்கிறார்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் தான் தொடங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலம் கல்விதான் எங்களுக்கு முக்கியம் என்பதைஅவர்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள்.

டெல்லியில் இளைஞர்கள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இந்த விவகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

' மாணவர்களின் கவலையையும் வேதனையையும் உணர்கிறோம் அவர்களின் அச்சங்களை நீக்குவதற்கு பதிலாக சில சுயநல சக்திகள் அவர்களை சுரண்டுவது துரதிஷ்டவசமானது ' என்று அறிக்கை வெளியிட்டது டெல்லி பல்கலைக்கழகம்.

இந்தப் போராட்டத்தை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் முயற்சி செய்கிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை தனியாக வைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு முன் போராட்டம் அதைத் தொடர்ந்து கைது என்று இந்த பிரச்சனையை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மற்ற கட்சிகளும் அதே தான் செய்கின்றன.

காக்ரோச் ஜனதா கட்சி இவர்களின் ஆதரவை பெரிய அளவு கொண்டாடவில்லை.

நேரில் அவர்களுக்கு ஆதரவு தருவதாக சொன்ன போது கூட அதை பெரிதாக அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

என் வழி தனி வழி என்ற அளவில் தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.

பிரதமர் நீட் தேர்வு கசிவுக்கு காரணமானவர்கள் எல்லோரையும் இந்த அரசு நிச்சயம் தண்டிக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்ற ஒற்றைக் கோரிக்கையில் பிடிவாதமாக நான்கு நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி இருக்கிறது.

பொதுவாக மோடி அரசியல் அழுத்தத்திற்கு உடனடியாக பதில் அளிப்பதில்லை என்ற கருத்தைக் கொண்டவர்.

தவறுகளை சரி செய்யவும் அவர் தயங்கியதில்லை .

நீட் தேர்வு சர்ச்சை ....புதிய தலைவலி...!?