தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
ஜனநாயகன் - லைட் பாய்

20260625083159195.jpeg

ஜனநாயகன் படம் சென்சார் அரசியல் காரணமாக ஜூலை 23ஆம் தேதி வெளியானது.

படத்தின் தொடக்கத்தில் முதல்வர் தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டுடன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் கோட்சூட்டில் ஜோசப் விஜய் அமர்ந்திருக்கும் படம் இடம் பெற்றுள்ளது. படத்தின் இறுதியில் ' பிரியமுடன் விஜய்' என்று நிறைவடைகிறது.


முதல்வர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர் சாய்குமார், தனது பாதுகாப்பு அதிகாரிகள், செயலாளர்கள் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு முந்தினமே விசேஷகாட்சிக்கு ஏற்பாடுச்செய்தார் .அவர்களுக்கு இது புதுஅனுபவம்.

தினமும் அரசு அதிகாரி போல் காலை 10 மணிக்கு எல்லாம் தலைமைச் செயலகம் வரும் முதல்வர் படம் ரிலீஸ் அன்று வரவில்லை .அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டார்.

முதல்வர் படம் என்பதால்அமைச்சர்கள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் முதல்க்ககாட்சிக்கு புறப்பட்டுவிட்டார்கள் .சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.சபநாயகரும் படம் பார்த்துவிட்டு ' 'ஜனநாயகன் படம் பார்த்தால் மூளை சுறுப்பபாகும் 'என்றுகருத்து சொன்னார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து முதல்வரின் கடைசிபடம் என்பதால் கண்ணீர் விட்டு அழுதார்.தற்சமயம் இந்த வீடியோ வைரலானது.

முதல்வர் விஜய்க்கு திருஷ்டி இருப்பதாக கூறி திருச்சி மாரிஸ் எல் ஏ தியேட்டரில் அவரது படத்திற்கு முன்பு சேவல் பலியிட்டு திஷ்டி கழித்தனர்தமிழக வெற்றி கழகத்தினர் சேவல் ரத்தம் முதல்வர் படம் முழுவதும் தெரித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரசிகர்கள் இடம் இருந்து திரையை பாதுகாக்க முள்வேலி அமைத்தது தியேட்டர் நிர்வாகம். திருவண்ணாமலை தியேட்டர் வாசலில் 5 அடி நீளம் உள்ள முதல்வர் படத்திற்கான கேக் கொண்டு வரப்பட்டு அதை வெட்ட கத்தி கொண்டு வராததால் மாவட்டச் செயலாளர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து இருந்து முதல்வர் போட்டோ எடுத்து அதையே கத்தியாக பயன்படுத்தி கேக் வெட்டினார்

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் ஜனநாயகன் படத்தைஏற்கனவே பார்த்து விட்டார்கள் என்பது வேறு விஷயம்.

முதல்வராக யார் வேண்டுமானாலும் விஜயை வசை பாடலாம். நட்சத்திர விஜயை எல்லோரும் விரும்பவே செய்வார்கள்.

விஜயின் இழப்பும், மன வலியும், விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் மட்டுமே புரியும்.