தொடர்கள்
கவர் ஸ்டோரி
நீட் ப்ளாஷ்பேக்- பிரகாஷ் பாலகிருஷ்ணன்   விகடகவி வாசகர்

20260624164550380.jpeg

நீட் தேர்வை வைத்து அரசியல் லாபம் பார்க்கிறது அரசியல்கட்சிகள்.

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ்.

அந்த நீட் தேர்வு மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக்கியது திமுக.

தனது துணைவியின் மகளை திகாரில் இருந்து கொண்டு வர நீட் மசோதாவை கொண்டுவர அனுமதித்தார் திருக்குவளை.முத்துவேல்.மகனார்.

அந்த நீட் தேர்வை முதலில் எதிர்த்து அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

நீட் தேர்வுக்கு முதலில் தடை போட்டது உச்ச நீதிமன்றம்.

அந்த வழக்கில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதிட்டவர் .சிதம்பரம் மனைவி.

தடை செய்யப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து போட்ட வழக்கிலும் நீட் தேர்விற்கு ஆதரவாக வாதித்திட்டவர் அவரே.

பிறகு நீட் தேர்வை கட்டாயமாகியது உச்ச நீதிமன்றம்.

நீட் தேர்வை எதிர்த்த ஜெயலலிதா கூட அதை கட்டாயமாகிய உடன் ஓராண்டுதான் விலக்கு கேடடார்.

நீட் தேர்வை அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் (சிறுபான்மை, தன்னாட்சி, உயர்மருத்துவ, அரசு, தனியார், அரசு உதவி பெரும் கல்லூரிகள் அனைத்திற்கும்) பொதுவாகியது உச்ச நீதி மன்றம்.

அதன் பிறகு நீட் தேர்வு ஐந்து முறை நடத்த பட்டுவிட்டது.

ஒவ்வொரு முறையும் அதன் முடிவுகள் மாற்றப்பட்டு தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக மாறி வருகிறது.

நீட் தேர்வை கொண்டுவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீட்சி அடையச்செய்துவிட்டது இன்று அரசில் இருக்கும் அதிகார மையம்.

நீட் தேர்வை எதிர்த்து இந்த போராட்டம் முதலில் தொடங்கவில்லை.

கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும். அதில் மாற்றம் வேண்டும் என்றுதான் இந்த போராட்டம் தொடங்கியது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அந்நிய நாட்டின் பங்களிப்பு இருக்கிறது.

இந்த போராட்டம் நடத்தும் CJP கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் நம் அண்டைநாட்டினர் மற்றும் அமெரிக்கா, சீனா வில் வசிப்பவர்கள்.

இது நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் நோக்கில் நடக்கும் வேலை. இருபத்தைந்து நாள் உண்ணாவிரதம் இருந்தவரின் மனைவி ராகுல் காந்தியின் பிரதமர் வீட்டு முன் நடத்திய போராட்டத்தை எதிர்க்கிறார்.

பிரியங்கா காந்தி, ராகுல் உடன் போராட்டம் நடத்தவில்லை.

பாராளுமன்றம் செயல்படக்கூடாது என்று இந்த போராட்டம். தமிழக முதல்வரின் படத்தை அமைச்சர்கள் பார்ப்பதை கண்டிக்கும் திருக்குவளை.முத்துவேல்.

பரம்பரை அன்று துப்புரவு பணியாளர்கள் போராடும் பொழுது என்ன செய்துகொண்டிருந்தது?

கூலி படத்தின் பிரத்யேக காட்சியை ரசித்துக்கொண்டிருந்தது.

படம் பார்த்துவிட்டு அதை பாராட்டினார் அன்றைய முதல்வர் திருக்குவளை.முத்துவேல்.பேரனார். இன்று இவர்கள் இன்று ஆளுபவர்களை குறை சொல்லுகிறார்கள்.

இந்த நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற வகை செய்த அதிமுக அரசியல் காரணங்களுக்கு இதை எதிர்க்கிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை மட்டுமே நடத்தி நூறு சதவிகிதம் மதிப்பெண் பெற செய்த தனியார் உறைவிட பள்ளிகளின் தலையில் சம்மட்டியால் அடித்த நிலையில்….

பதினோராம் வகுப்புக்கும் பொது தேர்வு கொண்டுவந்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவிய அன்றைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செயலை யாருமே கண்டுகொள்ளவில்லை.

இந்த நீட் தேர்வின் ஆரம்பப்புள்ளி திருக்குவளை.முத்துவேல்.பரம்பரை மட்டுமே. ஆனால் இன்று அவர்கள் நீட் தேர்வை எதிர்க்க காரணம் அது அவர்கள் கட்சியினர், ஆதரவாளர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு கொண்டுவந்த ஆப்பு.

ஆனாலும் நீட் தேர்வு முறையிலும், அதை நடத்தும் முறையிலும், அதன் முடிவுகளில் வெளிப்படை தன்மையும் இல்லாதவரை நீட் தேர்வினால் பெரிய மாறுதல் வரப்போவதில்லை.

அதை இன்றைய அரசும், அரசு அதிகாரிகளும் சரி செய்யவேண்டும்.

அதுவே இதற்கு தீர்வு.

உச்ச நீதிமன்றத்தின் முழு அரசியல்சாசன அமர்வை தவிர யாராலும்.....

திருக்குவளை.முத்துவேல்.பேரனார் அடிக்கடி சொல்லும் ...

"எந்தக் கொம்பனாலும்" நீட் தேர்வை நீக்க முடியாது".