தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ஐஸ்வர்யா லட்சுமி

2026062321135405.jpeg

" 100 கோடி கொடுத்து அழைத்தாலும் இனி சமூக வலைதளங்களின் பக்கம் வரமாட்டேன். ஆன்லைனை விட மக்களை நேரில் சந்தித்து பேசுவதை அதிகம் விரும்புகிறேன் " என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

அனுபமா பரமேஸ்வரன்

20260624171753841.jpg

" சில நேரங்களில் அமைதியை கண்டறிய தேவையற்ற முட்டுக் கட்டைகளை கடந்து சொல்ல வேண்டி இருக்கிறது. இன்று அந்த அமைதி என்னை தேடி வந்திருக்கிறது. இன்றிலிருந்து எனது வாழ்க்கையை நான் தேர்ந்தெடுப்பேன். இனி யாருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. கிட்டத்தட்ட மறந்தே போன என்னுடைய வாழ்க்கையை மீண்டும் காதலிக்க தொடங்கி இருக்கிறேன். ஒரு புதிய தொடக்கம் " என்று ஒரு பதிவை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டு இருக்கிறார். காதல் தோல்வி தான் காரணம் என்று பேச்சு வருகிறது.

பிரீத்தி முகுந்தன்

20260624155112723.jpg

" இன்றைய இளைஞர்களுக்கு என்னுடைய பேஷன் ஆலோசனை என்னவென்றால், உங்களுக்குப் பிடித்த ஆடையை தன்னம்பிக்கையுடன் அணியுங்கள். உங்கள் ஆடை உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தட்டும். மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் உங்கள் விருப்பத்தை மாற்ற வேண்டாம் " என்கிறார் நடிகை பிரீத்தி முகுந்தன்.

ஜனநாயகன்

20260623222153600.jpg

விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன். இணையத்தில் கசிந்ததை அடுத்து அதை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

நிமிஷா சஜயன்

கருணாஸ் நடிக்கும் ' என்ன விலை '? என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நிமிஷாசஜயன் நடிக்கிறார்.

அஞ்சலி

உடல் பெருத்திருந்த அஞ்சலி தற்போது உடற்பயிற்சி எல்லாம் செய்து 'ஸ்லிம்' ஆகி கவர்ச்சி வேடத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறார்.

அதர்வா

பராசக்தி படத்தில் அதர்வாவின் வில்லத்தனமான வேடம் திரையரங்கில் அவருக்கு நிறைய கைத்தட்டல் தந்தது .பேசாமல் தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடித்தால் என்ன என்று யோசிக்கிறார்.

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆக்சன் வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பம் அதற்கு ஏற்றபடி கதை தயார் செய்யுங்கள் என்று இயக்குனர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

விஸ்மயா மோகன்லால்

20260623222935186.jpg

நடிகர் மோகன்லால் மகள் விஸ்மயா மோகன்லால் ஜுட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் ' தொடக்கம் ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு அதிரடி சண்டை காட்சிகள் நிறைய இருக்கின்றதாம்.

தீபிகா படுகோன்

தற்போது தீபிகா படுகோன் அல்லு அர்ஜுனா ஜோடியாக 'ராக்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார் .இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தான் மீண்டும் கர்ப்பம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

பாக்யஸ்ரீ போர்ஸ்

20260624154301639.jpg

" என் தந்தைக்கு நைஜீரியா நாட்டில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு குடிப்பெயர்ந்தோம். அப்போது எனக்கு ஆங்கிலம் தெரியாது. அங்குள்ள பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் என்னை மட்டம் தட்டி கேலி செய்தார்கள் .அது என்னை கயாயப்படுத்தியது. எனினும் அந்த வலியையே பாடமாக மாற்றிக்கொண்டு தீவிரமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன். இன்று சரளமாக நான் ஆங்கிலம் பேச அந்த வலிகளே காரணம் " என்கிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20260623212057161.jpeg

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த நீலாம்பரி வேடம் போல் வலிமையான நெகட்டிவ் கேரக்டரில் வில்லியாக நடிக்க எனக்கு ஆசை என்கிற ஐஸ்வர்யா ராஜேஷ்.

காயடு லோஹர்

20260623211608657.jpeg

இதயம் முரளி படத்தில் அமுதா வேடத்தில் காயடு லோஹர் நடித்தார். இதனால் அவரை நிறைய பேர் பாராட்டியதில் மகிழ்ச்சி .இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் தமன் அவருக்கு ஒரு பியானோவை பரிசளித்து இருக்கிறார்.