தொடர்கள்
விளையாட்டு
" கால் பந்து உலக கோப்பை -ஸ்வேதா அப்புதாஸ்

உலக கோப்பை கால் பந்து போட்டி கடந்த ஒரு மாதமாக உலகின் தூக்கத்தை பறித்து கொண்டு பல கனவுகளை ரசிகர்களின் இதயங்களை கவ்வி கொண்டிருந்தது.

20260623113648512.jpeg
உலக கோப்பை மீண்டும் அர்ஜென்டைனா பக்கம் தான் செல்லும் என்று உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்க கடந்த ஞாயிற்று கிழமை அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சி நகரில் கிழக்கு ருத்தேரிபோர்ட் மெட் லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்றது .
மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விளையாட்டு உலகமே கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி உத்து பார்த்துக்கொண்டிருக்க மிக கடினமான விளையாட்டாக இருந்தது .
அர்ஜென்டைனா உலகமே எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்பது தான் அந்த இரவில் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது .
மெஸ்ஸி ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அனைவரின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கச்செய்து கொண்டிருந்தார் என்பது தான் உண்மை .

20260623113725777.jpeg
அதே சமையம் எதிர் அணியாக விளையாடிய ஸ்பெயின் அணி தூள்கிளப்பிக்கொண்டிருந்தது பளிச் என்று தெரிந்தது .
அனைத்து வீரர்களும் சூப்பராக பந்தை பாஸ் செய்து வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க கோல் போடமுடியாமல் தத்தளித்ததை பார்க்க முடிந்தது .
அர்ஜென்டைனாவின் டிபென்ஸ் அருமை ஸ்பெயின் வீரர்களால் கோல் போட முடியாமலே இருந்தது .
எக்ஸ்ட்ரா டைம் கொடுத்தும் முடியாமல் திணற மேலும் முப்பது நிமிடம் கொடுக்க அதிர்ஷ்டம் ஸ்பெயின் பக்கம் எட்டி பார்க்க பிரென் டோரஸ் பக்கம் பால் வர ஒரே அடி அதிர்ஷ்டவசமாக பால் கோல் ஆனது .
ஒரு நிமிடத்தில் சிதைந்து போனார்கள் அர்ஜென்டைனா வீரர்களும் ரசிகர்களும் கண் கலங்கி ஓடினார் மெஸ்ஸி அதற்கு பின் அவர்களால் ஸ்பீடாக விளையாட முடியவில்லை
மன ரீதியகா தொய்வான அர்ஜென்டைனா தோல்வியை சந்தித்தது .

20260623113808857.jpeg
ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஒரு கோலில் உலக கோப்பையை தட்டி உலகமே திரும்பி பார்க்க வைத்தது .
பதினோரு வீரர்களில் மிகவும் ரசிகர்கள் நேசித்த வீரர் 19 வயது லாமின் யமால் இவர் ஸ்பானிய முழு நேர ஒரு இளம் முன்கள வீரராக திகழ்கிறார்.

20260623115126331.jpeg

பார்சிலோனா லாமாசியா இளம் ஸ்பானியர் புட் பால் கிளப் உறுப்பினராகவும் ஸ்பெயின் தேசிய டீம் வீரராக உயர்ந்தார்.
2025 ஆம் வருடம் கோப்பா ட்ராபி வென்று உலகின் மிக இளம் கால் பந்து வீரர் என்ற பெருமையை யமால் பெற்று உயர்ந்தார் .
இந்த இளம் வீரர் 2007 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் பார்சிலோனாவில் உள்ள கேட்டலோனியா என்ற இடத்தில் அகதிகளாக வந்து தங்கின மொரோக்கோவை சேர்ந்த மௌனிர் நஸ்ராவி மற்றும் இக்வாட்டோரியல் கினியா நாட்டை சேர்ந்த ஷீலா எபானா தம்பதிக்கு பிறந்த குழந்தை தான் யமால்.

20260623113943744.jpeg
அப்பா மௌனிர் நஸ்ராவி ஒரு பெயிண்டர், அம்மா ஷீலா எபானா ஹோட்டலில் வெயிட்டராக பண்புரிந்துள்ளனர்.
இவரின் உண்மை இயற்பெயர் நஸ்ரோய் எபானா , இவரின் பிறப்புக்கு முன் பெற்றோர் வறுமையில் இருக்க இரண்டு குடும்ப நண்பர்கள் பணஉதவி செய்து கைகொடுத்தனர் அவர்கள் தான் லாமின் மற்றும் யமால் அவர்களின் உதவியை நினைத்து நன்றி கடனாக பிறந்த குழந்தைக்கு அவ்விருவரின் பெயரை சுட்டினார்களாம் .
ஐந்து மாத குழந்தை யமால் யுனிசெப் உதவி நாட்காட்டிக்கு குழந்தைகளின் புகைப்படம் எடுக்க ஒரு விபத்து போல தேர்வாக குட்டி பாத் டப்பில் குழந்தை யமாலை யுனிசெப் அம்பஸிடர் 20 வயது உலக கால் பந்து வீரர் லயனல் மெஸ்ஸி குளிக்க வைக்கும் படம் அந்த வருட காலெண்டரில் இடம்பெற்று உலகை திரும்பி பார்க்க வைத்தது அந்த படம் மெஸ்ஸிக்கு பெரிய புகழை பெற்று தந்தது .

20260623114053526.jpeg
அதே சமயம் அந்த கை குழந்தை 19 வருடம் கடந்து மெஸ்ஸியின் உலக கோப்பை கால் பந்தை தன் வசம் இருந்து தட்டி செல்லும் என்று நினைத்து பார்த்திருக்கமாட்டார் அந்த உலக புகழ் கால் பந்து வீரர்!.
துரதிர்ஷ்டவசமாக யமாலின் பெற்றோர் பிரிந்து விட அவரின் பாட்டி பாத்திமா வளர்ப்பில் குழந்தை வளர்ந்தான் .தன் மூன்றுவயதில் வீட்டின் அருகே தெருவில் புட் பால் விளையாடிவந்தான் குட்டிப்பையன் .
கால் பந்து விளையாட்டில் அதிகம் கவனத்தை செலுத்தின நான்கு வயது யமாலை பாட்டி பாத்திமா லா டோர்ரெட்டோ என்ற கால் பந்து கிளப்பில் சேர்த்து பயிற்ச்சி எடுக்க வைத்தார் .

20260623114141527.jpeg

சிறுவன் யமால் மிக திறமையாக கால் பந்தை விளையாடி அதிகம் கோல் போட்டு வெற்றி பெற யமாலுக்கு 304 என்ற எண்ணை வழங்கியது அந்த கிளப் அந்த எண் ரோசேஃபோண்டா என்ற ஊரின் தபால் பின் குறியீட்டின் கடைசி மூன்று எண்கள் [08304 ] .
அந்த ஊரின் தொழிலாளர்களின் மத்தியில் இந்த பொடி கால் பந்து வீரன் பிரபலமானான்.
திறமையான பார்சிலோனா ஆறு வயது யமாலை லாமாசியா ட்ரைனிங் அகாடமி அழைத்தது.

2026062311491497.jpeg
2014 ஆம் ஆண்டு அந்த கிளப்பில் உறுப்பினராக சேர்ந்து பயிற்ச்சி பெற்று கால் பந்து வழிகாட்டிகளான ரொனால்டினோ,மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோரை பின்பற்றி தன் கால் பந்து பயணத்தை துவங்கினார் யமால்.
இளம் வீரர் யமால் லாமாசியா அகடமியன் மிக சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினின் லாலிகா (லாலிகா என்பது சிறந்த கால் பந்து வீரர்கள் இடம்பெற்றுள்ள கால் பந்து அகாடமி) வரலாற்றில் சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் நூறு வருடத்துக்கு பின் இடப்பெற்ற மிக சிறந்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் யமால்.
2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 தேதி நடந்த கேடிஸ் கால் பந்து போட்டியில் 2-0 கோல் அடித்து வெற்றி சூடினார்.
ஐந்து நிமிடத்தில் யமால் அடித்த கோலை பார்த்து ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.
சிறு வயதில் மேன் ஆப் தி மேட்ச் என்ற சாதனையை பெற்றார்.
பல வெற்றிகளை ஸ்பெயின் நாட்டிற்கு பெற்று கொடுத்து சாதனை படைத்த யமால் அக்டோபர் 2-2023 ஆம் ஆண்டு யமால் தன் ஒப்பந்தத்தை பார்சிலோனாவுடன் 2026 வரை தொடர்ந்தார்.
பல வெற்றிகளை பெற்ற யமாலுக்கு கோல்டன் பாய் விருது வழங்கப்பட்டது.
அந்த விருது விழாவில் யமால் மிஸ்ஸிங் அன்று தன் பள்ளி லீவு கொடுக்கவில்லையாம்!.
16 வயதில் லாலிகா அகாடமிக்கு 213 நாட்களில் இளம் கால் பந்து வீரர் ஒருவர் 10 கோல் பெற்று சாதனை படைத்தார் யமால்.
2025 மே 27 ஆம் தேதி யமால் பார்சிலோனாவுடன் 2031 ஜூன் 30 வரை நீண்ட ஒப்பந்ததில் தன் 18 வது வயதில் கையெழுத்திடார்.
அவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. ஒரு வருடத்திற்கு 45.3 மில்லியன் டாலர். பார்சிலோனாவின் அதிகம் வருமானம் ஈட்டும் கால் பந்து வீரர் யமால் என்பது ஆச்சிரியமான ஒன்று.
அதற்கு பின் யமாலுக்கு பார்சிலோனாவின் எண் 10 டி ஷர்ட் வழங்கபட்டது. அந்த ஷர்ட்டை அணிந்து பல வெற்றிகளை ஸ்பெயினுக்கு பெற்று கொடுத்தார்.
2026 மே 25 ஆம் தேதி யமால் FIFA உலக கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.
ஜூன் 21 ஆம் தேதி சவுதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். உலக வரலாற்றில் பீலேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது 18 வயது இளம் வீரர் என்கிற பெருமையை பெற்றார்.

2026062311431664.jpeg
ஸ்பெயின் ஆஸ்திரியாவை 1-0 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்ற பின் மேன் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
ஸ்பெயின் அர்ஜைண்டைனாவை உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி நிமிடத்தில் 1-0 கோல் அடித்து உலக கோப்பை கைப்பற்றினார்கள்.
யமால் தன் 19 வயது 6 நாள் வயதில் சாதனை புரிந்து உலக அரங்கில் ஹீரோவாக உருவெடுதுள்ளார்.

20260623114413749.jpeg
யமால் ஒரு இஸ்லாமியர் ரமலான் நோன்பை காலை முதல் மாலை வரையில் கால் பந்து பயிற்சி செய்து கொண்டே கடைபிடிக்கும் ஒரு இளம் வீரர்.


இந்த இளம் உலக கோப்பபை சாதனையாளருக்கு அர்ஜன்டைனா அலெக்ஸ் படில்லா தொடர்பு இருந்தது.
பாடகி நிக்கி நிக்கோல் என்ற 21 வயது காதலி இருந்தாராம் 2025 அக்டோபர் மாதம் இருவரும் பிரிந்து விட்டனர்.

2026062311450344.jpeg
தற்போது 2026 FIFA உலகக்கோப்பை வெற்றி பெற்ற பிறகு அதே மைதானத்தில் யமாலை ஓடி வந்து கட்டி பிடித்து தன் காதலை வெளிப்படுத்தினார் இனிஸ் கார்சியா என்ற 21 வயது காதலி.

20260623114534926.jpeg
உலக கோப்பை கைப்பற்றின அடுத்த சில நிமிடங்களில் ஒரு குட்டி பையன் மைதானத்தில் ஓடி வந்து யமாலை கட்டி தழுவி முத்தம் கொடுத்து உலக கோப்பையை பெற்று தந்த பந்தை தன் குட்டி காலால் உதைத்து விளையாடி மகிழ்ந்தான் அவன் தான் லாமின் யமாலின் 3 வயது Half-Sibling தம்பி கெய்ன் மற்றும் பாரா என்ற சகோதரியும் உள்ளனர்.
கெய்ன் அடுத்த இளம் கால் பந்து வீரராக உருவாகுவான் என்பதில் சந்தேகமில்லை.
யமால் உலக கோப்பை வெற்றி பெறுவதற்கு முன் கடந்த ஜூன் மாதம் UNICEF Goodwill Ambassador ஆக தேர்வு செய்யப்பட்டு குழந்தைகள் இயற்கை அழிவு, போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடி சமயங்களில் என் உதவி கரம் அவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார் இந்த இளம் கால் பந்து வீரர் யமால்.

2026062311463991.jpeg
தன் வெற்றியை பறித்த லாமின் யமால் தன்னிடம் வந்து கட்டி தழுவி நன்றி சொன்னபோது ஒன்றுமே பேசாமல் கண்கலங்கி நின்றார் மெஸ்ஸி.

20260623114719444.jpeg
பாண்டிச்சேரியை சேர்ந்த செல்வி பாட்டி உலக கோப்பை கால் பந்து போட்டி துவங்கியவுடன் கால் பந்து வீரர்களின் பெயர் பொருந்திய டி ஷர்டுகளை விற்றார் அதில் வீரர்களின் பெயரை தப்பு தப்பாக உச்சரித்து கூறி விற்க அதை அவரின் பேரன் இன்ஸ்டாகிராமில் பதிய உலக புகழ் பெற்ற செல்வி லாமின் யமாலை -லட்சுமி யம்மாள் என்று கூறி அவர் வெற்றி பெற வேண்டும் என்று கூற அது உண்மையாகிவிட்டது.
தற்போது லாமின் யமால், லட்சுமி யம்மாள் என்று மாறியது தான் மிக பெரிய வேடிக்கை !.