தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260623210430683.jpeg

ஆகஸ்டு ஐந்தாம் தேதி பட்ஜெட் தாக்கல்.

யாரை போட்டு தாக்க போறாங்களோ ? மக்களையா ? போன ஆட்சியா ?

கரப்பான் பூச்சி கட்சியினர் விடிய விடிய போராட்டம்.

தாமரையோட இப்போதைய தொல்லை கரப்பான் பூச்சி தான் !!

விஜய் எங்களை தாயுள்ளத்துடன் அன்புடன் அரவணைத்துள்ளார் கடம்பூர் ராஜு அறிக்கை.

ஆளுங்கட்சி பாசம்னா சும்மாவா !!

மதுரவாயிலில் 27-ஆம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் ஆள் வராங்களா ?

கரூரில் 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார் ? ஆர் .பி. உதயகுமார் கேள்வி.

வாசலில் பாருங்கள் ,அண்ணா ஏதோ போலீஸ் மாதிரி தெரியுது !!

போர் சூழலிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரதமர் பெருமிதம்.

ட்ரம்புக்கு தெரியாமல் பார்த்துக்கோங்க அப்புறம் வரி போட்டுற போறார் ?

கட்சிக்கு துரோகம் செய்தால் கை கால் இல்லாமல் போய்விடும் ஆர்.எஸ். பாரதி.

அறிவாலயத்தில் மந்திரவாதிங்க நிறைய பேர் வந்திருப்பாங்க போல தெரியுது !!

வைகோ என்றால் பேச்சு, வைகோ என்றால் தமிழ் அமைச்சர் ராஜ்மோகன்.

ஆமா உங்களுடைய செய்தி தொடர்பாளர் அவர் தானே ?

பழனி கோவில் நில விவகாரத்தில் சிக்கும் சென்னை அதிகாரி யார் ?

அதிகாரிகள் லெவல்ல டிலிங் நடந்திருக்கும் போல தெரியுது !!

திருமாவளவன் நிகழ்ச்சிகளில் அனைவரையும் மேடை ஏற்றாதீர், மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு.

மேடையில் கூட்டம் ஜாஸ்தி கீழ கூட்ட கம்மியா இருக்கும் அதான் !!

பத்து ஆண்டுகளில் பிரிட்டனில் ஏழு பிரதமர் !!

இங்க பதினைந்து ஆண்டுக்கு ஒரே பிரதமர். பிரிட்டனில் பிரதமர் பதவி ரொம்ப வெய்ட் இல்ல போல தெரியுது !!

பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ " வந்தே மாதரம் பாடலை பார்க்காமல் பாட முடியுமா ? சிவசேனா உத்தவ் அணி கேள்வி.

வேணாம் ரொம்ப ரிஸ்க்கு !!