தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260429181143428.jpeg

அதிமுக வா ...தவெகா வா ...ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை.

அதுக்கப்புறம் ஆதவ் அர்ஜுனாவுடன் ஆலோசனை அப்படித்தானே எம் எல் ஏ சார் ?

மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா சம்பவம் சிபிஐ அமலாக்கதுறை விசாரிக்க வேண்டும் அதிமுக கோரிக்கை.

பாவம் சிபிஐ அமலாக்கத்துறை !!

சோனியா, ராகுல்காந்தியை விஜய் சந்திக்கவில்லை.

மோடி நேர சென்னைக்கு தான் நீங்க போகணும்னு சொல்லி இருப்பார் அதான் !!

25 மாவோயிஸ்டுகளை பிடிக்க பத்தாயிரம் பாதுகாப்பு படையினர் குவிப்பு ஜார்க்கண்ட் காடுகளில் வேட்டை

பத்தாயிரம் பெருசா ? 25 பெருசா ?

90% அதிமுகவினர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் ஆதவ் அர்ஜுனா பேட்டி.

அதன் பிறகு தமிழக வெற்றி கழகம் அதிமுக என்று பெயர் மாற்றம் செய்யப்படும் அப்படித்தானே அமைச்சர்.

மும்மொழிக் கொள்கை திணிக்க கூடாது டாக்டர் ராமதாஸ் கண்டனம்.

திராவிட தலைவர்கள் நடக்கும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை ஏற்கனவே திணித்திட்டாங்க தலைவரே !!

மம்தா அரசில் பணப் பலன்கள் பெற்று வந்தபோலி பயனாளிகள் 30 லட்சம் பேர் நீக்கம். மேற்குவங்க புதிய பாஜக அரசு அதிரடி.

சிறப்பு வாக்காளர் பட்டியல் மாதிரி சிறப்பு பயனாளிகள் நீக்கும் திட்டம் !!

அதிமுக எங்கள் உயிர் மூச்சு ஒற்றுமையாக இருக்கிறோம் வேலுமணி பேட்டி.

அப்புறம் நாளைக்கு மாற்றி பேசக்கூடாது?

2029 மக்களவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி சீமான் அறிவிப்பு.

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!

புதிய அரசு பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது உதயநிதி ஸ்டாலின்.

நீங்கதான் இப்பவும் திமுக ஆட்சி தான் தொடர்கிறது என்று சொன்னீர்கள் அதான் !!

மக்கள் உங்களிடம் பவரை தந்துள்ளனர் .பவர் கட் கூடாது. முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர்.

மக்கள் எவ்வளவு பவர் தந்தார்களோ அதற்கு ஏற்றபடி தான் பவர் இருக்கும் அப்படித்தானே தலைவரே ?

எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது முன்னாள் முதல்வர் பினாராய் விஜயன்.

நேயர் விருப்பம் எல்லாம் பாஜக நிறைவேற்றுகிறது போல் தெரிகிறது !!

காலாவதி தேதி குறிப்பிடாத பிரசாத கடைகளை மூட உத்தரவு அறநிலை துறை அமைச்சர் அறிவிப்பு.

புதுசா இப்பதான் வந்திருக்கிறார் அப்படித்தான் இருக்கும்.

ஜூன் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் மம்தா பானர்ஜி தகவல்.

அந்த கூட்டணி இன்னுமா இருக்கு?