ஜோதிகா

இந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு வராததால் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறார் ஜோதிகா.
மஹீமா நம்பியார்

சூரி நடித்து வரும் மண்டாடி என்ற தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஹீமா நம்பியார் நடிக்கிறார்.
திரிஷா

திரிஷா பற்றி அவதூறு செய்திகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால், திரிஷா அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "என்னுடைய தூக்கத்தை யாராலும் கெடுக்க முடியாது. காரணம் நான் எந்த தவறும் செய்யவில்லை. நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை குறி வைத்து திட்டமிட்டு பரப்பும் பொய்யான வதந்திகளை நான் மைண்டில் ஏற்றிக் கொள்வதே இல்லை "என்கிறார் திரிஷா.
மமீதா பைஜூ

பிரதீப் ரங்கநாதன் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு மீண்டும் ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார் .
அரசன்

சிம்பு, பிரியங்கா மோகன் சமுத்திரகனி, ஆண்ட்ரியா நடிக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அரசன் படம் தீபாவளி ரிலீஸ் என்கிறார்கள்.
பூஜா ஹெக்டே

சமீபத்தில் சாலையோர காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் பூஜா ஹெக்டேசெல்பி எடுத்துக் கொண்ட வீடியோ வைரலானது. "திரை உலகினரை வாழ வைப்பது ரசிகர்கள் தான். அப்படி வாழ வைக்கும் ரசிகர்களிடம் நான் ஏற்றத்தாழ்வு பார்த்தது கிடையாது "என்கிறார் நடிகை.
மீனாட்சி சவுத்ரி

நான் கேமராவுக்கு முன்னால் நடிப்பேன். கேமராவுக்கு பின்னால் நடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது என்கிறார் மீனாட்சி சவுத்ரி.
சனம் ஷெட்டி

நடிகைகள் தங்கள் சம்பளத்தை வெளிப்படையாக சொல்லாத இந்த நேரத்தில் என்னுடைய சம்பளம் 13 லட்சம் தான் என்கிறார் நடிகை சனம் ஷெட்டி.
சூர்யா

கருப்பு படம் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூர்யா.
ரித்திகா சிங்

முதல்முறையாக மலையாளத்தில் நடிக்க இருக்கிறார் ரித்திகா. சி.
நயன்தாரா

இளம் நடிகைகளுக்கு போட்டியாக சவால் விடும் வகையில் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறார் நயன்தாரா.
ரஜினி

ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

Leave a comment
Upload