
பெற்றோரின் சதாபிஷேகம் பிள்ளைகளின் குதூகலம். கல்லூரியின் சதாபிஷேகம் முன்னாள் மாணவர் சங்கத்தின் குதூகலம். மே 2, 2026 அன்று சென்னை RKM விவேகானந்தா கல்லூரியின் 80ஆம் ஆண்டு கல்விச் சேவை நிறைவை, அதன் முன்னாள் மாணவர் சங்கம் பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் கடந்த சில வருடங்களாக பற்பல நலத் திட்டங்களை கல்லூரிக்கு தங்கள் அங்கத்தினரான முன்னாள் மாணாக்கர்கள் மூலம் செவ்வனே செய்து வருகிறது. இந்த வகையில், இந்த கல்லூரி நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்த அமைப்பு ஒரு முன் மாதிரியாகவே கருதலாம்.
கல்லூரியின் 80ஆம் ஆண்டு நிறைவு அவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது. எங்க வீட்டு கல்யாணம் என்ற பாணியிலேயே நடத்திவிட்டனர்.
கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்வது போல் முன்னாள் மாணவர்களின் பரஸ்பர சந்திப்புடன் மாலை 4.30 மணி முதல் களை கட்டத்தொடங்கியது. அத்துடன் ‘‘சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’’ என்ற வள்ளுவர் வாக்கு தவறாமல் சிற்றுண்டியுடன் தேநீரை உண்டு, நிகழ்ச்சிக்கு ஆயத்தமானர்.
முன்னாள் மாணவர் சங்க குழு உறுப்பினர் முனைவர் பஞ்சாட்சரம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க, முனைவர் இராமநாதனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.

கல்லூரி செயலாளர் சுவாமி தியானகம்யானந்தா அவர்கள் முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு ஆற்றிய நற்பணிகளையும் சீரிய தொண்டையும் கோடிட்டு காட்டி, கல்லூரி மென்மேலும் சிறக்கவும், மேம்பாடு அடையவும் அணைத்து முன்னாள் மாணவரின் பங்கு மிகவும் அவசியமான வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் பி.வி. ரமணா (நிறுவனர், தலைவர், (ITM கல்வி குழுமம்) அவர்கள் முன்னாள் மாணவர்கள் கல்லூரியின் நினைவை தங்கள் இதயங்களில் சுமந்து, வாழ்வில் தாங்கள் அடைந்த நன்னிலைக்குக் காரணமான இக்கல்லூரியின் இந்நாள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக அவர்கள் அமைய விழைந்தார்.

மற்றொரு சிறப்பு விருந்தினரான திரு. டி. எஸ். விஜயராகவன், IAS (Rtd.), கல்லூரியின் வளமிகு வாழ்க்கைப் பாடங்கள் தன்னுடைய இந்திய ஆட்சிப் பணிக்கான நேர்முகத் தேர்வில் வெற்றியடையச் செய்ததை பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தார்.
இவ்விரு சிறப்பு விருந்தினர்களுமே இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களே என்பது தான் ஹைலைட்டே. அதாவது, இருவருமே 1957 இண்டர்மீடியட் பேட்ச் (pre engineering).
நிஜம் தானே! கடந்து வந்த எண்பது எண்பது ஆண்டுகளில் இந்த உலகிற்கு எத்தனை துறைகளில், வல்லுனர்களை செதுக்கிக் கொடுத்திருக்கும் இந்த கல்லூரி, எங்கள் கல்லூரி. கல்லூரிக்கும் பெருமிதம். சிறப்பிக்கப்பட்டவர்களுக்கும், இதோ நாம் படித்த கல்லூரி, அதே கல்லூரி நம்மை கௌரவிக்கிறதே என்ற பெருமை மேலிட்டது உணர்ந்த ஒன்று.
ஒன்று சொல்லவா? நமது பிரியமிக்க கார்ட்டூனிஸ்ட் மதன் சாரும் எங்கள் கல்லூரியில்தான் தனது கல்லூரி படிப்பை ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய ‘‘பாடறிவோம் படிப்பறிவோம்’’ என்ற இன்னிசை.
என்ன ஒரு பெருமையிது. தந்தையும் தனயனும் படித்த அதே கல்லூரியில் அதன் சதாபிஷேகத்திற்கு இணைந்து இன்னிசை பாடியது நிச்சயம் இந்த நிகழ்ச்சி அவர்களின் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத தருணமாகத்தான் இருக்கும்.
நாகேஸ்வரன் என்ற முன்னாள் மாணவர் தன் தந்தையுடன் (அவரும் முன்னாள் மாணவர் தான்) இணைந்து, மாற்றுத் திறனாளிகள்
உள்பட பல பாடகர்களைக் கொண்ட இன்னிசைக் குழுவின் இனிய திரை இசைப் பாடல்களை அள்ளித் தந்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார். இந்த குழு உலக அளவில் சென்று இன்னிசை மழை பொழிந்திருக்கின்றனர்.

விடுவார்களா? முன்னாள் மானவர்கள்!!!!
நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்களான இரு முன்னாள் மாணவர்களும்

குழுவுடன் சேர்ந்து பாடி அவையைக் கலக்கினர். முன்னாள் மாணவர் குழு உறுப்பினர் K.ஸ்ரீதரின் நன்றி கூறி சதாபிஷேக நிகழ்ச்சி நிறைவு செய்தார்.

Leave a comment
Upload