
பாரதிராஜா தமிழ் சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.
அவர் பட்டறையில் இருந்து பல கலைஞர்களையும் தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார்.
பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, சீமான், நெப்போலியன், ராதிகா, ராதா, வடிவுக்கரசி, ரேவதி, அருணா, இளவரசு, சித்ரா லட்சுமணன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பாக்கியராஜ் பொருத்தவரை பாரதிராஜா என்று பெயர் சொல்ல மாட்டார் 'எங்க டைரக்டர்' என்று தான் சொல்வார்.
கிராமத்து கதை மட்டும் தான் சொல்ல தெரியும் என்று விமர்சிக்கப்பட்ட பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் என்ற ஒரு நகரிய திகில் காட்சிகள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான படத்தை வெற்றிப்படமாக தந்தார்.
அந்தப் படத்துக்கு கதை வசனம் பாக்யராஜ் தான்.
கைதியின் டைரி படத்துக்கும் பாக்கியராஜ் தான் வசனகர்த்தா. கைதியின் டைரி அமிதாப் நடிப்பில் 'ஆக்ரி ரஸ்தா' பாக்கியராஜ் அந்தப் படத்தை இயக்கி மெகா ஹிட் ஆனது.
பாக்யராஜுக்கு இந்தியில் பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவிர்த்தார் பாக்கியராஜ்.
பாக்கியராஜ் நடிகனாக அறிமுகம் செய்ததும் பாரதிராஜா தான்.
16 வயது முதல் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாக்கியராஜை தன்னுடைய புதிய வார்ப்புகள் படத்தில் அவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
பாக்யராஜ் பற்றி எப்போதும் பெருமையாக பேசுவார் பாரதிராஜா.
"அவன் மிக சிறந்த கதை சொல்லி டயலாக் ரைட்டர், அவன் வசனம் சொல்லிக் கொடுக்கும் விதம் நன்றாக இருக்கும்.
நடிகர் விஜயனும் என்னுடைய அசிஸ்டன்ட் தான், அவன் மலையாளி.
கிழக்கே போகும் ரயில் படத்துக்காக நான் ராதிகாவை தேர்வு செய்த போது பாக்கியராஜ், விஜயன் இருவரும் இது சரியான தேர்வு இல்லை என்று என்னிடமே சொன்னார்கள்.
அந்தப் படம் வெற்றி பெற்றதும் என் தேர்வு சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
இப்போது நான் அவர்கள் இருவரிடமும் உங்க ரெண்டு பேரையும் நான் நடிகனாக்க போகிறேன் அப்ப இந்த நாடு உங்களை எப்படி கொண்டாட போகிறது என்று பாருங்கள் "என்று சொல்லி இருவரையும் நடிகர் ஆக்கினார்.
இவர்கள் இருவருமே நாடு கொண்டாடியது என்பதும் உண்மை .
மணிவண்ணனும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான்.
அவரும் மிகச்சிறந்த வசன படைப்பாளி.
அவர் வசனங்களை படப்பிடிப்பில் தான் யோசித்து சொல்ல நடிகர்கள் அதைப் பேச அப்போதுதான் வசனத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதப்படும் .மணிவண்ணனும் பல திரைப்படங்களை இயக்கி வெள்ளி விழா கொண்டாடியுள்ளன.
அவரது படங்களில் அரசியல் நெடி அதிகமாக இருக்கும். அது எதார்த்தம் கலந்ததாக இருக்கும்
. அரசியல்வாதிகளை பகிரங்கமாகவும் சில சமயம் மறைமுகமாகவும் கேலி செய்யும் வசனங்கள் எல்லோராலும் பாராட்டப்படும்.
இதற்கு உதாரணம் அமைதிப்படை. மணிவண்ணன் பாரதிராஜா பற்றி குறிப்பிடும் போது பாரதிராஜா என்ற பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவன் பாக்கியராஜ் அதற்கு அடுத்து நாங்கள் என்பார்.
அலைகள் ஓய்வதில்லை மணிவண்ணன் கதை வசனம் தான்.
மனோபாலா உதவி இயக்குனர் பிறகு இயக்குனர் நடிகர் என வெற்றி பெற்றார். ரஜினியை வைத்து மனோபாலா இயக்கிய ஊர்காவலன் மற்றும் விஜயகாந்தை நடிக்க வைத்த என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன.
சீமானும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான்.
1996-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி இந்தப் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் மாதவன் நடித்த தம்பி படம் சீமான் இயக்கியது தான் சிமான் பல படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார் நடிக்கவும் செய்திருக்கிறார்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் பொன்வண்ணன்.
இயக்குனர் கே ரங்கராஜ் பாரதிராஜா பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான்.
அவரின் உறவினர் மனோஜ் குமார், ஆவணப்படங்கள் புகழ் லீனா மணிமேகலை போன்றவர்களும் பாரதிராஜா தயாரிப்புதான்.

Leave a comment
Upload