
ஹ்ரீங்கார ரூபா
ஹ்ரீங்கார-ஜப ஸுப்ரீதா ஹ்ரீம்-மதீ ஹ்ரீம் விபூஷனா Iஹ்ரீம்-சீலா ஹ்ரீம்பதாராத்யா
ஹ்ரீங்கர்ப்பா ஹ்ரீம்பதாபிதா II
அம்பிகையின் ஹ்ரீங்கார ரூபத்தை இந்த ஸ்லோகங்களிலும் சிறப்பித்துக் கூறுகிறது
லலிதா த்ரிசதீ. அவளின் ஹ்ரீங்கார வடிவத்தையும், அதன் சிறப்புகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். வைபவ ரூபிணீ.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மந்திரங்கள் சப்தங்களாகப் பரவி இருக்கிறது. மகரிஷிகள்
அதில் சில மந்திரங்களைத் தங்கள் ஞான திருஷ்டியால் கண்டு பிடித்துத் தந்துள்ளார்கள். அதில்
மிக முக்கியம் பீஜாக்க்ஷர மந்திரங்கள். அதிலும் ஐந்தாவது எழுத்தாகிய ஹ்ரீம் மிக
முக்கியமானது.
அம்பிகை ஐந்து தத்துவங்கள் அடங்கியவள் என்பார் மகா பெரியவா. பஞ்சமீ
என்றுதான் அவளை ஸ்ரீலலிதா குறிப்பிடுகிறது. அவள் இந்த ஹ்ரீங்கார ஜபத்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள்.
ஹ்ரீம் என்ற மந்திரங்களுடன் கூடி இருக்கிறாள். அதையே பூஷணமாகக் கொண்டவள்.
மந்திரங்களே அவளின் ஆபரணமாக இருக்கிறது.
சிவ சக்தி ஸ்வரூபிணீ. சிவ தத்துவம் என்பது பரமசிவ ஸ்வரூபம். அதில் சிருஷ்டிக்க வேண்டும் என்று எண்ணம் சக்தி தத்துவம் என்கிறது வேதங்கள்.
சிவனும் சக்தியும் வெவ்வேறு அல்ல என்று கூறும் அதே வேதங்கள், சக்தியும் விஷ்ணுவும் பேதமற்றவர்கள் என்றும் உபதேசிக்கிறது.
அம்பிகையை நாராயணி, கோவிந்த ரூபிணி, விஷ்ணு ரூபினி, வைஷ்ணவி, முகுந்தா என்ற
பெயர்களால் சகஸ்ரநாமத்தில் அழைக்கப்படுகிறது. எனவேதான் சிவன், சக்தி, விஷ்ணு என்ற மூவருக்கும் எந்த ஒரு வேதமும் இல்லை
மும்மூர்த்திகளின் வடிவமானவள். ஸ்ருஷ்டி கர்த்ரீ, பிரம்ம ரூபா, கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ, சம்ஹாரிணீ ருத்ர ரூபா என்று போற்றுகிறது லலிதா சஹஸ்ரநாமம்.
அவளை ஸ்ருஷ்டி கர்த்ரீ என்கிறது நாமம். படைத்தல் ஈஸ்வரனின் தொழில். அவரின் சக்தியாக உள்ளே நிறைந்திருப்பவர் அம்பிகை. இயக்கும் சக்தி. அவளையும் ஈசனையும் பிரித்தறிய முடியாது.
அதேபோல் கோவிந்த ரூபிணி நாமமும். கோவிந்தா என்பது விஷ்ணுவைக் குறிக்கும் நாமம். விஷ்ணுவே அம்பிகைதானே. வாக்குக்கு எட்டாத பரம்பொருள் காக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டது. கோ என்றால் பூமி. அதைக் காப்பவன் கோவிந்தன்.
அம்பிகையை காக்கும் ரூபமாக இருக்கிறாள்.
எனவேதான் கோவிந்த ரூபினி என்கிறது.
கோவிந்தா என்று அழைத்தால் ஓடி வருபவன் மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவே
அம்பிகை என்று கூறுகிறது. கோவிந்தன் என்பது காக்கும் தொழிலைக் குறிக்கிறது. அந்தக்காக்கும் தொழிலையும் அம்பிகையே சக்தியாக இருந்து வழி நடத்துகிறாள்.
பிரேமரூபா என்கிறது நாமம். அந்தப் பிரேமைக்கு ஒவ்வொரு விதமான பொருள்
சொல்வார்கள். நம்மை விட வயதில் மூத்தவர்களின் மேல் காட்டப்படும் அன்பு பக்தி,மரியாதை என்பார்கள். சம நிலையில் உள்ளவர்களிடம் காட்டுவது நட்பு. நம்மை விடவும் சிறியவர்களிடம் காட்டுவது வாத்ஸல்யம், கருணை, அன்பு. இவை எல்லா வடிவமாகவும் இருப்பவள் அம்பிகை. தாயே என்று அழைத்தால் ஓடி வருபவள் தாட்சாயினி் இந்த ஏகாக்ஷர மந்திரத்தால் பூஜிக்கத் தகுந்தவள் அம்பிகை. மந்திரங்களால் ஆராதிக்கத் தகுந்தவள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகா. உலக இயக்கம் ஹ்ரீம் என்னும் மந்திரத்தாலேயே இயங்குகிறது. பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் மஉதலானோர் இந்த பீஜாக்க்ஷர மந்திரத்தைக் கொண்டே தங்கள் செயல்களைச் செய்கிறார்கள். எனவே அவர்களைத் தனக்குள் அடக்கியவள் என்கிறது லலிதா த்ரிசதீ.
இந்த மந்திரத்தையே தன் பெயராகக் கொண்டவள் அம்பிகை. முன்னூறு, ஆயிரம்
என்பது ஒரு எண்ணிக்கைக்காக மட்டுமே. கோடிக்கணக்கான நாமங்கள் அவளுக்கு. சப்தங்கள் எல்லாம் அவள் வடிவே. அவளே இந்த ஹ்ரீம் என்னும் சொல்லின் பொருளாகவும்
இருக்கிறாள்.
ஹ்ரீம் நம என்ற மந்திரத்தால் ஸ்ரீ சக்கரத்திற்குப் பூஜை செய்வது மிகவும் விசேஷமானது என்று அம்பாள் உபாசகர்கள் கருதுகிறார்கள்.
ஹ்ரீங்காரத்திற்கே ஆதாரமாய் இருப்பவள் அம்பிகை என்கிறது த்ரிசதீ. உலகத்துக்கே,
உயிர்களுக்கே ஆதாரமாய் இருப்பவள் அவள்தானே.
இதை அறிந்து முறையாக இந்த நாமத்தைச் சொல்பவர்களுக்கு சகல வளங்களும்
தருவாள் அம்பிகை.
தொடர்கள்
தொடர்கள்

Leave a comment
Upload