
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 18
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் பதினேழாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மகா பெரியவாளின் பக்தகோடிகளில் மிகவும் பிரசித்தமாக பேசப்பட்டவர் ஸ்ரீமான் அண்ணாதுரை ஐயங்கார். ஆன்மீகத்திலும்,பக்தியிலும் பெரிதும் நாட்டமில்லாத ஒரு வக்கீல். எப்படி ஸ்ரீ மகா பெரியவா அவரை அனுகிரஹித்து ஆட்கொண்டு வேதம் தழைக்க வழிசெய்தார் என்பதே இந்தவார காணொளி. பசுவை பாதுகாத்து பார்த்துக்கொண்டாள் நம் பெற்றோருக்கு சேவை செய்தது போல் என்று கோ சேவை பற்றியும் விளக்குகிறார்.

Leave a comment
Upload