தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260811232104635.jpg

Heading : சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்பதி – பால்கி

Comment : நல்ல விஷயம், நாமும் பின்பற்றலாம்

Ujjivanam , Chennai

Heading : ஆசிரியர் தின சிந்தனைகள் - மரியா சிவானந்தம்

Comment : ஆசிரியர் பணி எப்போதும் அறப்பணியே

Ujjivanam , Chennai

Heading : திருமுருகாற்றுப்படையும்..!! அறுபடை வீடுகளும்..!!! - 1 - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முருகனது பெருமையைக் கூறும் மிகச் சிறந்த நூல் என்பதையும், நக்கீரர் வரலாற்றையும் திரு.ஆரூர் சுந்தரசேகர் அவர்களின் திருமுருகாற்றுப்படையும், அறுபடை வீடுகளும் தொடர் மூலம் தெரிந்து கொண்டேன். விகடகவிக்கு நன்றி.

வெங்கட்ராயலு, போரூர்

Heading : திருமுருகாற்றுப்படையும்..!! அறுபடை வீடுகளும்..!!! - 1 - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆன்மீக எழுத்தாளர் ஆரூர் சுந்தரசேகர் அவர்களின் திருமுருகாற்றுப்படையும், அறுபடை வீடுகளும் தொடர் ஆரம்பமே மிகவும் சிறப்பு. நக்கீரரின் வரலாறு மற்றும் திருமுருகாற்றுப்படை உருவான விதம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இதுவரை கேள்விபடாத சில நிகழ்வுகள் அருமை. இத்தொடர் தொடர்ந்து விகடகவியில் வருவதில் மிக்க மகிழ்ச்சி. இதே போல் ஆன்மீக தொடர்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி விஜயலெஷ்மி ஜெய்சங்கர் பெங்களூர்

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அருமை, உண்மை

Ujjivanam , Chennai

Heading :அரசமைப்புச் சட்டம் நிரந்தரமானதா? மாற்றம் தேவையெனில்...... – முனைவர் ஜெ .கோமளலட்சுமி

Comment : மிகவும் சரியான அலசல் .... இதில் அரசியல் கட்சிகளின் அணுகுமுறை அரசியல் ஆதாய நோக்கம் அடிப்படையிலேயே இருப்பதால் எந்த அளவுக்கு சாத்தியம் ❓❓❓

Sriram S , Chennai

Heading : முகவரியற்ற வீரர்கள்! - ஆர். சுந்தரராஜன்

Comment : ரொம்பவே கசப்பான உண்மை 😭😭

Sriram S , Chennai

Heading : .நம்பிக்கை - கி. ரமணி

Comment : நேபாள காவலாளி களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கேன்.... இதுவும் அதை போலவே நம்பிக்கை அடிப்படையில் எழுதப்பட்ட கதை... லோகேஸ்வரனுக்கு நம்பிக்கை மீது ஏராள நம்பிக்கை வந்தது. !!!!👌👌👌

Sriram S , Chennai

Heading : கணபதி Vs கண்ணன் - மோகன் ஜி, ஓவியம்: தேவா

Comment : கணபதியும் கண்ணனும் ஒன்று கணமேனும் மறவாமை நன்று... அருமை 👏👏👏👌

Sriram S , Chennai

Heading : சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்பதி – பால்கி

Comment : நாங்கள் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான்.... மாவிலை, தென்னை மர தோரணம்.... அலங்காரம்....🙏

Sriram S , Chennai

Heading : மீட்டெடுக்கப்பட்ட வங்கி லாக்கர்-மாலாஶ்ரீ

Comment : இப்பேர்பட்ட பேரிடர் நடுவே இந்த மாதிரி திருட்டு பெரும் வருத்தத்தை தருகிறது... அதை போலிஸார் கண்டுபிடித்து மீட்டது சிறிது ஆறுதல் தந்தாலும் திருட்டு ரொம்பவே வருத்தம் அளிக்கிறது.....

Sriram S , Chennai

Heading : நம்பிக்கை !!! உயிரைக் காப்பாற்றிய நம்பிக்கை !! - மருத்துவர் பரூக் அப்துல்லா

Comment : இந்த பதிவு ரொம்பவே விவரமாக இருந்தது.... காப்பாற்ற பட்டவர்களுடன் நாமும் இருந்தது போல் ஒரு உணர்வு வந்தது... இந்த இருவரும் மற்றும் 6வயது குழந்தை மீட்பு ஆண்டவர் மேல் நிறைய நம்பிக்கை தருகிறது..... மீட்பு பணியில் உள்ள வீரர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்🙋🙋🙋

Sriram S , Chennai

Heading : மனிதத்தின் கரங்கள் -இந்துமதி கணேஷ்

Comment : இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சீனாவின் கட்டமைப்பு வேலைகள் தான் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.... இதை ஏற்க (முற்றிலுமாக) மறுக்கிறது சீனா.... பிரம்மபுத்திரா சீன எல்லைக்குள் ஓடிவரும் பாதையில் சீனா அமைத்துக்கொண்டிருக்கும் பெரிய அனை இன்னும் இது போல மிக பெரிய பேரிடர் களை அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் மாநிலங்கள் எதிர் கொள்ள நேரிடலாம்.... இந்தியா அரசாங்கம் இதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

Sriram S , Chennai

Heading : ஒரு தலைமுறையை காப்பாற்றிய ராஜேந்திர டவாடி- 1623 குழந்தைகளின் நம்பிக்கை நாயகன் !! ஜாசன்

Comment : நல்ல வேளை டெலிஃபோன்கள் வேலை செய்தன... சரியான நேரத்தில் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை...👏👏👏 இதே போல முன் எச்சரிக்கை எல்லோருக்கும் கிடைத்திருந்தால்.....😭😭

Sriram S , Chennai

Heading : வளர்ப்பா....வார்ப்பா – பா.அய்யாசாமி

Comment : கதையும் அருமை, விளையாடும் தமிழும் அருமை👌

Meenakshi Ragupathi , Chennai

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : தப்பு தப்பா சொல்றீங்க காயடுலோஹர்.... உங்க பக்கத்தில் உக்கார சான்ஸ் கிடைச்சதுக்கு ரஜினி தான் கொடுத்து வச்சிருக்கார். உங்களுக்கு தண்டனையா தெரியல....? பொய் சொல்லப் படாது.... எம். ஆர். மூர்த்தி, மும்பை..