
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஓசுன் (Osun) மாநிலத்தில் சுயதொழில் செய்யும் இளவயது பொறியாளர் அடெபாயோ அபியோடன் (Adebayo Abiodun). இவர், பல்வேறு இணையதளங்களில் 'யக்கபாட்' (Yakkabad) எனும் பெயரில் பரவலாக அறியப்படுகிறார். இவர், சமீபகாலமாகத் தன்னிடம் விற்பனைக்கு வரும் பழைய துருப்பிடித்த இரும்பு பொருட்கள் மற்றும் தூக்கி எறியப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கொண்டு, மிகக் குறைந்த செலவில் வித்தியாசமான 'டெஸ்லா சைபர் டிரக்' (Tesla Cybertruck) போன்ற ஒரு நவீன வடிவிலான சொகுசு காரை உருவாக்கி, உலகளவில் இளம் தலைமுறையினரின் கவனமத்தை பெரிதும் ஈர்த்துள்ளார்.

தனது சுற்றுப்புறக் குடியிருப்புகளில் வீணாக வீசியெறியப்பட்ட பழைய இரும்பு தகடுகள், துருப்பிடித்த உலோகங்கள் மற்றும் தூக்கி எறியப்பட்ட உதிரி பொருட்களைச் மூலப்பொருட்கள் ஆகச் சேகரித்து, இந்த நவீன சொகுசு காரின் உடலமைப்பை (Geometric Body Panels) அடெபாயோ அபியோடன் வடிவமைத்துள்ளார். மேலும், இந்த சொகுசு காரில் பழைய, பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றின் மிகப் பழைய இன்ஜினைப் பொருத்தியுள்ளார்.
இதுதவிர, காரின் ஸ்டீயரிங் சிஸ்டம், பிரேக் போன்ற மிக முக்கியமான பாகங்களை, எந்தவொரு மிகப்பெரிய தொழிற்சாலை உபகரணங்களும் இல்லாமல், தனது கைகளாலேயே சொந்தமாக உருவாக்கியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் தனது முயற்சியைத் தொடங்கிய இவருக்கு, ‘டெஸ்லா சைபர் டிரக்’கின் தனித்துவமான மற்றும் எதிர்கால வடிவமைப்பு (Futuristic Design) கவர்ந்ததால், அதை சவாலாக எடுத்துக் கொண்டு, குறைந்த செலவில் செய்து முடித்ததாக அடெபாயோ அபியோடன் கூறியுள்ளார்.
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த சொகுசு காரை, நைஜீரிய வீதிகளில் அடெபாயோ அபியோடன் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, அடெபாயோ அபியோடனின் அசத்தலான திறமையைக் கண்டு வியந்த டெஸ்லா கார் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), தன்னை நேரில் சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a comment
Upload