
அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற சில வாரங்களிலேயே அந்த பதவியை பதவிலகல் செய்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இது குதிரை பேர அரசியல் என்று விமர்சனம் அப்போதே, வைக்கப்பட்டது.
இப்போது மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கட்சிமாறிய அதே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஆளுங்கட்சி வாய்ப்பினை அளித்திருக்கிறது. ஓட்டு கேட்க சென்ற ஆளுங்கட்சி வேட்பாளர்களை துரோகி என்று தொகுதியில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்புக் குரலும் எழத் தொடங்கி இருக்கிறது.
இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொது நல வழக்கில் அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால், தேர்தலுக்கான செலவை அவர்கள் ஏற்கும் வகையில் தேர்தல் புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் அந்த பொதுநலவழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனது பதவியை ராஜினாமா செய்ய சட்டமன்ற உறுப்பினருக்குஉரிமைகள் உள்ளது. உரிய காரணமில்லாமல் ராஜினாமா செய்வதன் மூலம் மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படி ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெறும் ஒருவர் தேர்தல் முடிவு வெளியானதுமே அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு, இடைத்தேர்தலில் இன்னொரு கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுவது என்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது என்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
நீதிபதிகள் கண்டனம் நியாயமானது கட்சித்தாவல் தடுப்பு சட்டம் போல் ஒரு கட்சியில் போட்டியிட்டு இன்னொரு கட்சிக்கு தாவும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச காலம் ஆறு ஆண்டுகள் தடைவிதித்து தேர்தல் ஆணையம் சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இது போன்ற கட்சி தாவல் குதிரை பேரம் போன்றவை முடிவுக்கு வரும்.

Leave a comment
Upload