தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

வாசகர் மெயில்

20260828184021688.jpg

Heading : மும்பை கணபதி கொண்டாட்டங்கள் 2026- மோகன் ஜி

Comment : களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நதிகள் அல்லது கடலில் கரைப்பது தவறல்ல, மாறாக அதுவே மிகவும் சரியான மற்றும் ஆன்மீக ரீதியான சுத்தமான களிமண்ணால் செய்யப்படும் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் ஆன்மீக ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கின்றன. நன்மைகள்: 1) இயற்கை களிமண்ணில் நதிகள் மற்றும் குளங்களில் கரையும் போது, அது நீரின் அடியில் படிந்து, தண்ணீரில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை ஈர்த்து அடியில் தங்க வைக்கிறது. 2) களிமண் சிலைகள் கரைவதால், ஆற்றின் அல்லது குளத்தின் படுகைகள் இயற்கையான முறையில் பலமடைகின்றன. இது நீர் நிலைகளின் நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது. 3) "மண்ணிலிருந்து உருவான அனைத்தும் மண்ணுக்கே திரும்பும்" மற்றும் "இயற்கையிலிருந்து வந்த இறைவன் மீண்டும் இயற்கையோடு கலக்கிறான்" என்ற வாழ்வின் மிக முக்கிய தத்துவத்தை இந்த சடங்கு நமக்கு உணர்த்துகிறது. 4) இரசாயனங்கள் இல்லாத இயற்கை களிமண் சிலைகள் தண்ணீரில் மிக வேகமாக கரைந்து விடுவதால், நீர்வாழ் உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. தீமைகள்: 1)களிமண்ணுக்குப் பதிலாக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்படும் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையாது. 2) சிலைகளுக்குப் பூசப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பூச்சுகள் நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவில் இறக்கச் செய்கிறது. 3) பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் பிற செயற்கை ஆபரணங்களைச் சிலைகளுடன் சேர்த்து நீரில் கரைக்கும் போது, அது குடிநீர் ஆதாரங்களைக் கெடுக்கிறது. சுருக்கமாக சொன்னால், சுத்தமான, வண்ணம் தீட்டப்படாத அல்லது இயற்கை வண்ணம் பூசப்பட்ட களிமண் விநாயகரை வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் எந்தத் தீமையும் இல்லை.

Ujjivanam , Chennai

Heading : வியாதிகளைத் தீர்க்கும் திருப்பதிகங்கள் - பால்கி

Comment : நம் முன்னோர் அருளிச்செய்த பதிகங்களை நாமும் பாடிப்பயன் பெறுவோம்

Ujjivanam , Chennai

Heading : தீராத நோய்கள் தீர்க்கும் கோயில்கள்..!! - (1) - சுந்தரமைந்தன்.

Comment : பத்திரமாக பாதுகாக்க வேண்டிய தகவல், விகடகவியாருக்கு நன்றி

Ujjivanam , Chennai

Heading : இதயத்தைப் பாதுகாப்போம் -டாக்டர் கார்த்திக் ராமநாதன்.

Comment : அருமையான, உபயோகமான , பதிவு

Ujjivanam , Chennai

Heading : நடக்கலாம் நடக்கலாம் - டெக்கோராம்

Comment : நடையைப் பற்றய இந்தக் கட்டுரை படிக்க நல்லாத்தான் இருக்கு.... ஆனா நடக்கற காரியமா...? என்று அங்கலாய்க்கிறார் என் நண்பன் நடராஜன்.

எம். ஆர். மூர்த்தி , மும்பை

Heading : " புரோஸ்டேட் கேன்சர் ஆண்களே உஷார் "! -ஸ்வேதா அப்புதாஸ்

Comment : புரோஸ்டேட் கேன்சர் விழிப்புணர்வு.... நல்ல விரிவான கட்டுரை, பாராட்டுக்கள்....👏👏

Sriram S , Chennai

Heading : இதயத்தைப் பாதுகாப்போம் -டாக்டர் கார்த்திக் ராமநாதன்.

Comment : இதய நோய் வராமல் தடுக்கவும், அப்படியே வந்தாலும் அதற்கு பிறகும், தினசரி ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறைதான் முக்கிய காரணம்.... இதை நன்றாக புரிய வைத்த டாக்டருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏

Sriram S , Chennai

Heading : MET- கல்யாணத் தகுதித்தேர்வு -பா அய்யாசாமி

Comment : நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்தான கதை👌பாராட்டுக்கள்

Meenakshi Ragupathi , Chennai

Heading : MET- கல்யாணத் தகுதித்தேர்வு -பா அய்யாசாமி

Comment : Super

Seethalkshmi R, Thiruverumbur , Trichy