
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 24
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் இருபத்தி நான்காம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
புது பெரியவாளை சந்திக்க வரும் குடும்பம், ஸ்ரீ மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர் பிரபல கண் மருத்துவர் ஸ்ரீ பத்ரி அவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு பின் ஸ்ரீ பெரியவாளை எப்படி கவனித்துக்கொண்டார், ஸ்ரீ மகா பெரியவா உத்தரவின் பெயரில் அமெரிக்காவிலிருந்து வந்த குடும்பம் வேதத்திற்கு தங்களை அர்பணித்துக்கொண்ட வைபவம் என இந்த வாரம் அற்புத நிகழ்வுகள்.

Leave a comment
Upload