
சென்ற சனிக்கிழமை (26.09.2026) மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் மாலை நான்கு மணி... ஆட்டோ நகர நகர...நத்தையும் ஓவர்டேக் எடுத்துடும் அளவுக்கு டிராஃபிக்.
. ஒரு பொம்மை கடைக்காரர் சொன்ன வரிகள் தான் கீழே.
ஆமாம் ! நீங்க வாங்கிட்டீங்களா?
வாங்க!
வாங்க வாங்க!!
இதோ கொலு பொம்மைகள் ரெடி! வாங்க வாங்க!!
இடப்புறம் வீதியை அடைத்தவாறே அடுக்கடுக்காய் படிகளில் அடுக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாய் கண் கவர் பொம்மைகள். கவர்ந்திழுக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மொய்ப்பு. விலை பேசல், வாங்கிய பொம்மைகளை சிறு அட்டை பெட்டிகளில் அடைத்து, இப்பவே களை கட்டட் தொடங்கியாச்சு. இது ஒரு சாம்ப்பிள் தான். சென்னையில் மாம்பலம் இருக்கு, பாண்டி பஜார் இருக்கு, குறளகம்னு ஏகப்பட்ட இடங்களில் பொம்மைகள் விற்பனைக்கு இருக்கே.இதோ அந்த காட்சிகளின் புகைப்பட சுற்றுலா.
12 அக்டோபர் முதல் நவராத்ரி ஆரம்பம்.



(கண்ணுக்கெட்டியவரை கொலு கடைகள்.....)

(கொலு பொம்மைகளை அடுக்குகிறார் கடைக்காரர்)


(நாங்க விற்க ரெடி! நீங்க வ=வாங்க ரெடியா?....)






(கடைக்கார அம்மா பொம்மைகளை அடுக்கும் மும்முரத்தில்..)

(மெயின் கடைகளைக் காணோம்!!!!!....)

Leave a comment
Upload