தொடர்கள்
பொது
மஹாளய பட்சம் : பித்ருக்களை நினைவு கூர்தல் பற்றிய ஒரு புரிதல் - மோகன் ஜி

2026901155631240.jpeg

இந்த வருடத்திற்கான மஹாளய பட்சம் 27.09.2026 அன்றே தொடங்கிவிட்டது.

மஹாளய அமாவாசை (10.10.2026) கழிந்த மறுநாள் வரும் பிரதமை திதி தினமும் சேர்த்து பதினாறு நாட்களுக்கு மனங்குவித்து சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமையாக இருப்பது மஹாளய பட்சம் நித்ய தர்ப்பணம்.

இந்த மஹாளய பட்சத்தில் விதித்திருக்கின்றபடி தர்ப்பணங்கள் செய்வது நமக்கும் நம் சந்ததியினருக்கும் மிகுந்த நன்மை தரவல்லது.

மஹாளய பக்ஷம் பற்றிய ஒரு புரிதலைச் சொல்ல வந்தேன்.

நம் முன்னோர்கள் சொந்தங்களையும் உறவுமுறைகளையும் கொண்டாட வழிவகை ஏற்படுத்தியிருக்கிறார்கள் .

சிரார்த்தம், தர்ப்பணம் போன்ற நீத்தார் வழிபாடுகளிலும் நமது முன்னோரை நினைவு கூர்வதும், நமது நன்றியறிதலை வெளிப்படுத்தும் விதமாகவும் நடப்பவை.

மஹாளய பக்ஷ காலத்தில்தான், நம் பெற்றோர்களுக்கும், அவர்கள் வகையிலான மூன்று தலைமுறைகளுக்கும் மட்டுமின்றி, மறைந்துவிட்ட ஏனைய சொந்தங்களுக்கும் தர்ப்பணம் செய்து நினைவுகூர்கிறோம்.

வருடாந்திர சிரார்த்தம், மாதாந்திர அமாவாசை சமயங்களில் தலைகாட்டாத ஏனைய சொந்தங்களுக்கு இந்த பக்ஷ சமயத்தில் மட்டும் முக்யத்துவம்.

எவ்வகை சொந்தங்கள்? பெரிய தகப்பனார், சித்தப்பா, பெரியண்ணன், தம்பி, பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் பிள்ளைகள், அத்தை, அம்மாவின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள்,அவர்களின் கணவன்மார்கள், நம்முடன் பிறந்த அக்கா தங்கை, மனைவி, மக்கள், மைத்துனர்கள், மருமகள்.

இவர்கள் மட்டுமில்லாமல் நமது குரு, ஆச்சாரியார், சினேகிதர்கள், ஆகியோருக்கும் மஹாளய பக்ஷத்தில் இடம் உண்டு.

மஹாளயம் என்றாலே பரந்த இருப்பிடம் என்றுதான் பொருள்.

வருடாவருடம் மஹாளய பக்ஷத்தை மிக ஆச்சாரமாகச் செய்வதும், ஏனையோரைச் செய்யத் தூண்டுவதும் என் வழக்கம்.

என் குருமார்கள் வரிசையில் பாரதியும் உண்டு. தெரிந்தும் தெரியாமலும் விடுபட்டுப் போன உறவுகளுக்கும் நீர்க்கடனில் இடம் உண்டு.

'இருப்பவர்களையே கொண்டாட நாதியில்லை; போனவர்களுக்கு இது வேறயா?' என்ற அங்கலாய்ப்பையும் எதிர்கொண்டது உண்டு தான்.

2026901161225192.jpeg

நம் பித்ருக்கள் கருணாமூர்த்திகள்.

பித்ரு ஸ்தானம் எய்திய பின் அவர்களிடத்தில் கோபம், பொறாமை, ஓரவஞ்சனை போன்ற மானிட துர்க்குணங்கள் இருப்பதில்லை.

எனினும் அவர்களுக்கான சிரார்த்த, தர்ப்பணாதிகளை செய்யாமலிருப்பது வருந்தச் செய்யும். அதை பித்ரு சாபம் என்கிறார்கள். சில குடும்பக் கோளாறுகளுக்கு அதுவே காரணம் என்று ஜோதிட வல்லுனர்கள் சொல்வார்கள். பித்ருக்கள் கடனைத்தான் வள்ளுவரும் நீத்தார் கடன் என அறத்துப்பாலில் - இல்வாழ்க்கை அதிகாரத்தின் 43ஆவது குறளின் -

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை மூலமாக குடும்பத்தலைவன் செய்யவேண்டிய ஐந்து முக்கிய கடமைகளில் முதல் கடமையாகத் தெளிவு படுத்தியிருப்பார்.

பித்ருக்கள் வழிபாடு - சுலோகங்கள்

பித்ருக்களுக்கான சுலோகங்கள் உண்டு. அவற்றில் எளிமையான இரண்டு சுலோகங்கள் இதோ.

இந்த ஸ்லோகங்கள் நம் பித்ருக்களுக்கு ப்ரீதியானவை. முக்கியமாக மஹாளய பட்சம், அமாவாசை/ மாதப்பிறப்பு/க்ருஹண கால தர்ப்பணங்களின் போது சொல்வது விசேஷமானது.

ஏதோ காரணங்களினால் தர்ப்பணம் செய்யமுடியாமல் போனவர்களும்கூட, தன் பெற்றோரையும் மூதாதைகளையும் நன்றியோடு நினைத்துக் கொண்டு இவற்றை சொல்ல வேண்டும்.

இவற்றை தாய் தந்தையற்ற இருபாலரும் சொல்லி முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம். பித்ருக்களுடைய ஆசிகள் நம்மை வழிநடத்தும்.

ஜெய் பவானி!

பித்ரு ஸ்லோகம் -1

அமூர்த்தானாம் ச மூர்த்தானாம்

பித்ருணாம் தீப்த தேஜஸாம்

நமஸ்யாமி ஸதா தேஷாம்

த்யாயினாம் திவ்ய ஸக்ஷுஷாம்

இந்த்ரானாம் ச நேதாரோ

தக்ஷ மாரிச யஸ்ததா

தான் நமஸ்யாமி ஸர்வான் வை

பித்ரூம் சைவ தோஷதீஸ் ததா

நக்ஷத்ராணாம் க்ரஹாணாம் ச

வாய்வக்னீ யோஸ்ச பித்ரூ நபி

த்யாவா ப்ருத்வீ யோஸ்ச சதா

நமஸ்யாமி க்ருதாஞ்சலி :

நம பித்ருப்ய ஸப்தப்யோ

நமோ லோகேஷு ஸப்தஸு

ஸ்வயம்புவே நமஸ்யாமோ

ப்ரஹ்மனே யோக ஸக்ஷுஸே

~~~~

பித்ரு ஸ்லோகம்- 2

ஸ்ரீபிரம்மா உவாச:-

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே

ஸர்வ தேவ மயாய ச

ஸுகதாய பிரஸன்னாய

ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய

ஸுவர்காய பரமேஷ்டினே

ஸர்வ தீர்த்தாவ லோகாய

கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆசு தோஷாய

சிவ ரூபாய தே நம:

ஸதா அபராத க்ஷமினே

ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன

லப்தம் மயா வபு:

ஸம்பாவனீய தர்மார்த்தே

தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்னான தபோ ஹோம ஜபாதி

பஸ்ம தர்சனம்

மஹா குரோஸ்ச்ச குரவே

தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாப ஸ்தவனாத் கோடி ச

பித்ரே தவ தர்ப்பணம்

அஸ்வமேத ஸதை ஸ்துல்யம்

தஸ்மை பித்ரே நமோ நம:

பலஸ்ருதி:-

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம்

ப்ரயதோ நர:

ப்ரத்யஹம் ப்ராதருத்தாய

பித்ரு ஸ்ரார்த்த தினேபி ச

ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத்

பிதுரக்ரே ஸ்திதோபி வா

ந தஸ்ய துர்லபம் கிஞ்சித்

ஸர்வக்ஞதாதி வாஞ்சிதம்

நாநாபி கர்ம க்ருத்வாதி ய:

ஸ்தெளதி பிதரம் ஸுத:

ஸத்ருவம் ப்ரவிதாயைவ

ப்ராயச்சித்தம் ஸுகீபவேத்

பித்ரு ப்ரீதி கரோநித்யம்

ஸர்வ கர்மாண்யதார்ஹதி