தொடர்கள்
விகடகவியார்
பி டி உஷா சாதனையை முறியடித்த தமிழ் வீராங்கனை--விகடகவியார்

2026902050918244.jpeg

-விகடகவியார்

ஜப்பானில் நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் இந்தியா ஏதாவது பதக்கம் வாங்குவதும் தொடர்கிறது. போட்டி தொடங்கிய ஒன்பதாவது நாள் அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் கடந்து அவர் வெண்கல பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் முதலிடம் பிடித்த ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை மரியம் கரீம் தங்கத்தையும், இரண்டாம் இடத்திற்கு கஜகஸ்தானை சேர்ந்த அடெலினா ஜெம்ஸ் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 54.75 வினாடிகளில் முடித்ததன் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பாக பி.டி .உஷா நிகழ்ச்சிய சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார். 1984- இல் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55.42 வினாடிகளில் பி.டி.உஷா முடித்தது தேசிய அளவில் இந்தியாவில் சாதனையாக நீடித்து வந்தது. நடப்பு ஆசிய விளையாட்டில் ஏற்கனவே கலப்பு 4x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் வித்யா ராம்ராஜ் இருந்தார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் எனது தேசிய சாதனையை முறியடித்து இருப்பது மிகவும் சிறப்பான தருணம் என்று பி.டி.உஷா பாராட்டியிருக்கிறார்.