தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

202690204575876.jpeg

தனியார் பேருந்து வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு.

ஆமா, ஆயுத பூஜை, தீபாவளி பொங்கல் என்று அவங்க இப்ப கொள்ளையடிக்க வேண்டிய வேலை ஜாஸ்தியா இருக்கு !!

சிவன் ஏழைகளின் கடவுள் ! ராமர் பணக்காரர்களின் கடவுள் ! தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜக கண்டனம்.

ஆக, கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக்கிறார் அவர் ?

லஞ்சம் கொடுத்து தான் அரசு வக்கீலாக வர வேண்டுமா ? நீதிமன்றம் கேள்வி.

ஆளுங்கட்சி அப்படி தான் சொல்லுது ?

பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள், அமைச்சரிடம் புகார்.

தொட்டா விடமாட்டேன் ! யாரையும் தொட விட மாட்டேன் ! என்று சினிமா டயலாக் எல்லாம் பேசினாங்க ?

திருமணத்துக்கு மறுநாளே விவாகரத்து பெற்ற பெண் மீண்டும் வந்தால் ஏற்போமா ? இடைத்தேர்தலில் திமுக கேள்வி.

மாப்பிள்ளை மோசடி பேர் வழி என்றால் என்ன செய்வது ?

போக்குவரத்து அபராதத்தை மின்சார கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கலாம் உச்சநீதிமன்றம் யோசனை.

அப்போதான் ஏமாத்துறவங்க ' ஷாக்' ஆயிடுவாங்க !

திமுக - எடப்பாடி கூட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி.

நீங்க சி.வி சண்முகம், வேலுமணி, கூட்டணி மாதிரி அப்படித்தானே அமைச்சரே ?

எடப்பாடி நாகரிக அரசியல் பேச வேண்டும், அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை.

இப்ப நீங்க பேசுற நாகரீக அரசியல் மாதிரிதானே அமைச்சரே ?

இடைத்தேர்தலுக்கு திமுக அதிமுகவே காரணம் துரை வைகோ குற்றச்சாட்டு.

விசுவாசம்?

மேற்கு வங்கத்தில் கால் பதித்த தமிழக வெற்றி கழகம்.

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி இல்ல போல இருக்கு?

தமிழக விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் கட்சி அதிமுக எடப்பாடி பேச்சு.

ஆனால், அறுவடை தான் வேற யாரோ பண்ணிட்டாங்க ?

முன்மொழி திட்டத்திலிருந்து ஆறாம் வகுப்புக்கு விலக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

இதை காலாண்டு பரீட்சைக்கு முன்னையே சொல்லி இருக்கலாம் இல்ல ?

60 ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்தும் அமைச்சரவையில் இடம் தரவில்லை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதங்கம்.

ஆனா, இங்க ஆதரவு என்று சொன்னதும், அமைச்சர் என்று சொல்லிட்டாங்க !

கருத்தொற்றுமை இல்லாமல் இந்த உலகில் எந்த ஒரு சிறப்பான முடிவையும் எடுக்க முடியாது பா.சிதம்பரம்.

காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனை பத்தி சொல்றாரு ?

அதிமுகவை இரண்டாக பிளந்து விட்டார் விஜய் - உதயநிதி குற்றச்சாட்டு.

உங்க கூட்டணியே காலி பண்ணிட்டாரு அத சொல்ல மாட்டேன்றீங்க ?