நிவேதா பெத்துராஜ்

கொஞ்ச நாள் சினிமாவுக்கு லீவ் விட்டிருந்த நிவேதா பெத்துராஜ் தற்சமயம் 'ஆதர்ஷ குடும்பம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வத்துடன் நடிகர்கள் இயக்குனர், தயாரிப்பாளர் என்று எல்லோரையும் மீண்டும் தொடர்பு எல்லையில் வைத்திருக்கிறார் நடிகை.
சிருதி சனோன்

"பெண்கள் பொது இடங்களில் பயம் இன்றி சுதந்திரமாக வாழ முடிந்தால் மட்டுமே மகள்கள் தினம் கொண்டாடலாம்." என்கிறார் நடிகை. சிருதி சனோன்.
பிரியங்கா மோகன்

ஆரம்பத்தில் பிரபல ஹீரோக்குளுடன் ஜோடி சேர விருப்பப்பட்ட பிரியங்கா மோகன் நல்ல கதை என்ற ரூட்டில் யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
திரிஷா

சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வாம்பரா என்ற தெலுங்கு படத்திலும், மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. ஆனால், இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் தாமதமாய் கொண்டிருக்கிறது என்பதில் வருத்தத்தில் இருக்கிறார் திரிஷா.
காயடு லோஹர்

நடிகை காயடு லோஹர் சொந்தமாக ஒரு ஆடை வடிவமைப்பாளரை வைத்திருக்கிறார். என் சம்பந்தமான ஆடைகளை இவர் தான் டிசைன் செய்வார் அவருக்கு நீங்கள் தனி சம்பளம் தர வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்கிறாராம் நடிகை.
பாக்யஸ்ரீ போர்ஸ்

கதாநாயகி என்று இல்லை வில்லியாக கூட நடிக்க நான் தயார் என்கிறார் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ்.
ராஷி கன்னா

ரஜினிகாந்த் நடிக்கும் ' தர்மன்' படத்தில் தற்சமயம் ராஷிகன்னா நடித்து வருகிறார். ரஜினியுடன் நடிப்பு அனுபவம் பற்றி கேட்டபோது நடிகை" அவர் இப்போது எனக்கு நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார் என்கிறார்.
ஸ்ரீ லீலா

"மருத்துவம் ஒரு புறம், சினிமா ஒரு புறம் என்று பயணிப்பதால் காதலிக்க எல்லாம் என்னிடம் நேரமே இல்லை" என்று பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியனை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்றக் கேள்விக்கு இப்படி ஒரு பதில் சொல்கிறார் நடிகை ஸ்ரீ லீலா.

Leave a comment
Upload