தொடர்கள்
விகடகவியார்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

ஜப்பானில் நாகோயாவில் இருபதாவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஜப்பான் ,சீனா, தென்கொரியா ,தாய்லாந்து உள்பட 45 நாடுகள் பங்கு பெறுகின்றன. இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழக வீரர் வீராங்கனைகளும் பதக்கங்கள் வென்று இருக்கிறார்கள்.

அவர்கள் பற்றிய விவரம் இதோ :

1.அபிநயா ராஜராஜன்

2026903075221373.jpg

அபிநயா ராஜராஜன் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். தடகளம் கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பதக்கம் வென்ற அணியில் தமிழக தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் இடம்பெற்று இருந்தார். அவரது வெற்றியை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய். இது தவிர அவர் சாதனையை பாராட்டி தமிழக அரசு 30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

2. டி.கே. விஷால்

2026903075245496.jpg

டி.கே.விஷால் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சேர்ந்தவர். 400 மீட்டர் நான்கு பேர் அடங்கிய கலப்புத் தொடர் ஓட்ட குழுவில் டி.கே . விஷாலும் ஒருவர். இந்தக் குழு வெள்ளிப் பதக்கம் வாங்கி இருக்கிறது. டி.கே.விஷால் ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறார். இவருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

3. ராஜேஷ்

2026903075310249.jpg

ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் ராஜேஷ், ரமேஷ் இருந்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்ட பேரளத்தை சேர்ந்தவர் ராஜேஷ், ரமேஷ் இவருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டு தெரிவித்தும் 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார்.

4. வித்யா ராம்ராஜ்

2026903075342982.jpg

கோவையை சேர்ந்த ராம்ராஜ் மீனா தம்பதியினருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளாக பிறந்தவர்கள் வித்யா மற்றும் அவர் சகோதரி நித்யா. தந்தை ராம்ராஜ் ஓட்டுனராக பணிபுரிகிறார். தாய் மீனா வித்யாவின் விளையாட்டு ஆர்வத்திற்கு ஊக்கம் தந்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்கள் வென்று வரலாறு படைத்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

5. வேலவன் செந்தில்குமார் ஜோஸ்னா சின்னப்பா

2026903075409314.jpg

2026903075435235.jpg

ஆசிய விளையாட்டுப் போட்டி ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன், செந்தில்குமார் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்கள். இவர்களுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டு தெரிவித்து 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்திருக்கிறார்.

6. பரணிக்கா இளங்கோவன்

2026903075457350.jpg

பரணிக்கா இளங்கோவன் தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் பெண்களுக்கான போல்வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார். இவர் போல் வால்ட் பிரிவு போட்டியில் வெண்கல பதக்கம் வாங்கியிருக்கும் பரணி கா இளங்கோவனை முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டி அவருக்கும் 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

7.ஹரிஹரன்

202690307551914.jpg

ஹரிஹரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேர்ந்தவர். இவர் பேட்மிட்டன் பிரிவில் இந்திய ஆண்கள் பிரிவில் சிறப்பாக ஆடி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதியுதவி செய்து வருகிறது. இவரையும் முதல்வர் ஜோசப் விஜய் பாராட்டி 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார்.

8. கமலினி

2026903075546717.jpeg

மதுரையை சேர்ந்த கமலினி மகளிர் கிரிக்கெட் பிரிவில் இடம் பெற்றிருந்தார். மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வாங்கி சாதனை படைத்திருக்கிறது. எனவே கமலினியை பாராட்டி வாழ்த்து சொன்ன முதல்வர் அவருக்கு 75 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார்.

9. இளவேனில் வாலறிவன்

2026903075610172.jpg

இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த துப்பாக்கி சூடுதல் வீராங்கனியான இவர் கல்வியை முதன்மையாக கொண்ட ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இவர் பெற்றோர் இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர் இருந்தாலும் விளையாட்டில் இவரை ஊக்குவித்தார்கள். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார்கள்.