கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டி:
யாருக்காக: பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்காக
நோக்கம்: குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிஞ்சுக்கிட்டு, அடுத்து என்ன பண்ணலாம் என்ற தெளிவை பெற்றோருக்குக் கொடுப்பது. அதன்மூலம் பயத்தையும் பதற்றத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது.
பகுதி 2: “இது என் தவறா?”
குற்ற உணர்விலிருந்து ஏற்றுக்கொள்வது வரை
குழந்தைக்கு ஏதோ சிரமம் இருக்கு என்று தெரிஞ்சதும், பெற்றோருக்கு நிறைய கேள்விகள் வரும்.
“நான் ஏதாவது தப்பா பண்ணிட்டேனா?”
“வீட்டுல சரியா கவனிக்கலையா?”
“இன்னும் கொஞ்சம் கண்டிப்பா இருந்திருக்கணுமா?”
இப்படி நினைக்கறது இயல்புதான். ஆனால் அந்தக் குற்ற உணர்வுக்குள்ளேயே நின்னுட்டா, குழந்தைக்கு உதவ வேண்டிய நேரமும் போயிடும்.
இந்தப் பகுதியில், கற்றல் குறைபாட்டுக்கான காரணங்களைப் பற்றி நமக்குத் தெரிஞ்சவை என்ன, இன்னும் தெரியாதவை என்ன, அதே நேரத்தில் பெற்றோராக நமக்குள்ள நடக்கிற உணர்வுப் பயணம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
இதில் பார்க்கப்போவது:
- கற்றல் குறைபாட்டுக்கான காரணங்கள்: நமக்குத் தெரிஞ்சவை, தெரியாதவை
- முதல்ல மறுப்பு, கோபம், குற்ற உணர்வு என்று போய், கொஞ்சம் கொஞ்சமா ஏற்றுக்கொள்வது
- குடும்பத்தினரும் சுற்றியிருக்கிறவர்களும் சொல்லும் வார்த்தைகள்
- அந்தப் பேச்சுகள் குழந்தையின் தன்னம்பிக்கையை எப்படி பாதிக்கலாம்?
முக்கியமான விஷயம்:
“இது என் தவறா?” என்ற கேள்விக்கு பதில் தேடிக்கிட்டே இருப்பதைவிட, “இப்போ என் குழந்தைக்கு என்ன உதவி தேவை?” என்று கேட்க ஆரம்பிப்பதுதான் முக்கியமான மாற்றம்.
பேசுவோம்..

*"பிருந்தா ரகுநாத்"*
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.

Leave a comment
Upload