தொடர்கள்
பொது
அக்கு பிரஷர்ஒரு அறிமுகம் - மஹாலக்ஷ்மி

2026901215415717.jpg

அக்கு பிரஷர் அல்லது அக்குபஞ்சர் எனும் அற்புத கலையை எனக்கு அறிமுகம் செய்த அந்த இறைவனுக்கு நன்றி. இந்த கலையை கற்கும்போது இறைவனின் அதிசயங்களைக் கண்டு நான் வியந்தேன். உடம்பில் வரும் உபாதைகளுக்கு உடம்பிலுள்ள அக்கு பிரஷர்கு பிரஷர் புள்ளிகளை கொடுத்து உடம்பை சரிசெய்து கொள்ளும் அற்புத கலை இந்த அக்கு பிரஷர் ஆகும். இந்த உலகத்தில் பஞ்சபூதங்கள் இருப்பது போல் மனிதனது உடம்பிற்குள்ளும் பஞ்சபூதத்தை இறைவன் படைத்துள்ளான். குறையினும் மிகையினும் நோய் என்பது ஒரு வழக்கு சொல்லு உடம்பிலுள்ள பஞ்சபூதத்தில் எது அதிகமானாலும் எது குறைவானாலும் நோய் வந்துவிடும் அதை சமன்படுத்தி அனைத்து உறுப்புகளையும் நடுனிலைப் படுத்துவது இந்த கலையின் நோக்கமாகும் ஆயகலைகள் அறுபத்தி நான்கு ஆகும். நான் நிறைய கலைகளை கற்று அறிந்திருக்கிறேன். என்னை மிகவும் ஆட்கொண்ட கலை இந்த அக்கு பிரஷர் ஆகும். நிறைய வைத்தியத்தில் நிறைய வழிமுறைகள் இருப்பது போல் , அக்கு பஞ்சரிலும் நிறைய முறைகள் உள்ளன. அனைவருக்கும் தெரிந்தது குத்தூசி எனப்படும் பாடி அக்கு பஞ்சர், டிசிஎம் ஆகும் ஆரிகுலர் அல்லது காது சிகிச்சை முறை, ஸ்கால்ப் அக்கு பஞ்சர், சுஜோக் அக்கு பஞ்சர் அல்லது அக்கு பிரஷர். இதில் பரவலாக எல்லாருக்கும் தெரிந்தது டிசிஎம் என்னும் குத்தூசி. இம்முறை சுஜோக் அக்கு பிரஷர் ஆகும். இந்த முறையில் கைகளிலும் கால்களிலும் ப்ரஷர் கொடுப்பதன் மூலம், காந்தத்தை வைத்து கட்டுவதன் மூலவும் நிறைய வியாதிகளை குணப்படுத்தலாம். சுஜோக் என்பது விரிவாக்கம் சூ என்றது கை, ஜோக் என்பது கால் கை மற்றும் கால்களில் கொடுக்கப்படும் சிகிச்சை. இதை கண்டறிந்தவர் ப்ரொஃபசர் பாக் ஜேவோ எனும் கொரியன் நாட்டவர் ஆவார் அந்த மாமேதையின் மூலமே இந்த கலை உலகங்கும் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைப்படி நம்முடைய உடல் முழு உடலும் நமது கைகளிலே இருக்கின்றது. இதில் நாம் சிகிச்சை அளிக்கும்போது அது தேவையான சக்தியை மேக்னெட் மூலம் பெறுகிறது சில நேரங்களில் கலர் தெரபி எனப்படும் வண்ணசிகிச்சை மற்றும் நம்பர் தெரபி எனப்படும் எண்கள் சிகிச்சை மூலவும் சில வியாதிகளை குணப்படுத்தலாம். "நோய் நாடி நோய்முதல் நாடி அது தனிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பது வள்ளுவன் வாக்கு. நோயை கண்டறிந்த உடனே அதற்கான மருத்துவ சிகிச்சை கொடுத்தால் நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தலாம். உடல் நலத்தைப் பேணலாம் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் எல்லாரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம். எதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் எந்த இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை எதுக்கோ ஓடிக் கொண்டிருக்கிறோம் உண்னும் நேரத்தில் உண்ணாமல் உறங்கும் நேரத்தில் உண்ணாமல் வேலை செய்கிறோம். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஓய்வு நேரத்தை கடவுள் விதித்திருக்கிறார் அந்த நேரத்திலும் நாம் அந்த உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அதனாலேயே நோய் வந்துவிடுகிறது பலருக்கும் சிறு வயதிலேயே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் பிபி, அதிக ரத்த அழுத்தம் இந்த மாதிரி பல நோய்கள் வந்துவிடுகின்றன இந்த விதியை நாம் புரிந்துக் கொண்டு சரியான நேரத்தில் தூங்கி சரியான உணவை உண்டு வந்தாலே உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.