தொடர்கள்
விகடகவியார்
நடுவானில் உயிர் காத்த ரியல் ஹீரோ-விகடகவியார்

2026903065504102.jpeg

கேப்டன் ஸ்மித் மச்சார்.

2026902042740490.jpeg

செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி பறந்தது.

பெரும்பாலோர் இஸ்ரேல் குடிமக்கள்.

விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கு பிறகு, விமானம் 7500 என்ற ஸ்க்வாக் குறியீட்டை அனுப்பியது, இது பொதுவான அவசர குறியீட்டை அனுப்பியது.

விமானத்தில் நாசவேலை அல்லது கடத்தல் நடந்திருக்கலாம் என்பதை குறிக்கிறது.

மீண்டும் அது 7700 என்றக் குறியீட்டை அனுப்பியது.

விமானிகள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் ஏதோ அடிதடி என்பதை உணர்ந்து வந்து தன் அம்மா அப்பாவிடம் சொன்ன குட்டிப் பெண் நினா முதல் ஹீரோ. அந்த குட்டி தேவதை தான் முதல் சேவகி.

கழிவறைக்கு சென்ற அந்து சின்னப் பெண் அந்த சத்தத்தை கேட்டு வந்து சொல்லாவிட்டால் யாருக்கும் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்காது.

2026903061119444.jpeg

உடனடியாக ஓடிச் சென்று சிலர் பார்க்கையில்.....

பைலட் ஸ்மித் மச்சார் கத்திக் குத்து ரத்தக் காயங்களுடன் கதவைத் திறந்து விட்டு தரையில் வீழ்ந்து கிடந்தார்.

சில இளைஞர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் விமானிகள் அறையில் அலறல் சத்தம் அதிகமாகவே மேலும் சில இளம் பயணிகள் உள்ளே நுழைந்தனர்.

விமானி ஸ்மித் மச்சாரை தூக்கி அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர்.

விமானி துணை விமானி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது புரிந்தது.

துணைப் விமானி, விமானியை கத்தியால் கடுமையாக தாக்கி விட்டு விமானத்தை கடத்துவது அல்லது தரையில் மோத முயற்சிப்பது என்று திட்டமிட்டு இருப்பது தெரிந்தது.

துணை விமானியை தாக்கி அவரை விமானிகள் இருந்த அறையில் இருந்து வெளியே இழுத்து வந்து சில பயணிகளின் கட்டுப்பாட்டில் அவரை உட்கார வைத்தனர்.

துணைப் விமானியை செல்போன் சார்ஜர் ஓயர்களை கொண்டு அவரின் கைகளை கட்டினர்.

விமானத்தில் இருந்த சில ஆஃப் டியூட்டி விமானிகள் கட்டுப்பாட்டு அறையில் நுழைந்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

180 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.

2026902043121872.jpeg

180 பயணிகளை பாதுகாத்து தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார்.

இந்தியர்.

பிரதமர் மோடி அவரை உண்மையான நாயகன் என்று புகழ்ந்தவர் அவரது செயல்பாடு மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலும், மற்றவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அவர் இருந்திருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.

மோடி பேசிய தொலைபேசி வீடியோ இங்கே....

சிக்கலான நேரங்களில் அதிலும் ஆபத்தான நேரங்களில் ஒருவரது அணுகுமுறை தான் காப்பாற்றும்.

அனுமன் சாலிசா தான் என்னை காப்பாற்றியது என்றார் கேப்டன் ஸ்மித்.

பயணிகள் அனைவரும் அவரை நிஜ நாயகன் என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு"மாச்சரின் சமயோசித முடிவு பயணிகளை பாதுகாப்பாக தரையிறங்க வைத்திருக்கிறது." என்று பாராட்டி இருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "மாச்சரின் சமயோசித முடிவால் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டு இருக்கிறது" என்று பாராட்டியிருக்கிறார்.

கேப்டன் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மச்சாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலை மற்றும் கைகளில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026902043701602.jpeg

கேப்டன் மச்சார் மீது தாக்குதல் நடத்திய துணை விமானி விமானத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் போது அல்லது புகை மூட்டம் காரணமாக உள்ளே இருக்கும் மின்சார பெட்டிகள் பேனல்கள் திறக்க முடியாமல் போனால் அதை உடைப்பதற்காக பயன்படுத்த ஒரு கோடாரி எப்போதும் வைத்திருப்பார்கள். அந்தக் கோடாரியை எடுத்து தான் கைகள் கிட்டத்தட்ட துண்டாகும் அளவுக்கு கேப்டன் மச்சார் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தி இருக்கிறார்.

பேனா கத்தி கோடாரி இரண்டையும் மாறி மாறி பயன்படுத்தியதால் தான் கேப்டன் படுகாயம் அடைந்தார் என்ற தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

17000 அடி வரை கட்டுப்பாட்டை இழந்த கீழே சென்று கொண்டிருந்த விமானத்தை உடனடியாக நிலை நிறுத்தி காப்பாற்றியவர் இன்னொரு விமானியல்ல. ஒரு பிளம்பர்.

2026903062652148.jpg

விமானத்தை பத்திரமாக தரையிறங்க பிளம்பர் ஒருவரும் உதவி இருக்கிறார். பிளம்பர் யானிவ் ஹயோன் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இவர் சமூக வலைதளத்தில் விமானம் எப்படி இயங்குவது என்பதை ஆர்வம் காரணமாகஅடிக்கடி பார்த்திருக்கிறார்.அந்த அறிவு செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கிய விமானத்தை சீராக கையாண்டு, கீழ்நோக்கிப் பாய்வதை தடுத்தார்.

அவரும் ஒரு ஹீரோ. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அவரை கட்டிப் பிடிக்க வர, அவர் மன்னிக்கவும், இந்த சந்திப்பிற்காக ஒரு நல்ல சட்டை வேண்டும் என்று என் சூட்கேசை கேட்டேன் கிடைக்கவில்லை, ரத்தம் தோய்ந்த சட்டையை காட்ட, அட, விடுப்பா நீ ஒரு ஹீரோ என்று இஸ்ரேல் பிரதமர் இழுத்து கட்டிக் கொள்வது சமூக ஊடகத்தில் வைரலாக போய்க் கொண்டு இருக்கிறது.

அந்த நெகிழ வைக்கும் வீடியோ இங்கே

2026903062717551.jpg

விமான சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானி மீது தற்போது விசாரனை முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

கேப்டன் ஸ்மித் மச்சார் இந்தியாவில் மும்பையில் வளர்ந்தவர். அவரது பெற்றோர் இன்னும் அங்கு தான் வசித்து வருகின்றனர்.

2011-ஆம் ஆண்டு இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டில் பணியில் சேர்ந்தவர். 2022-இல் ஃப்ளை துபாயில் (fly Dubai-இல்) இணைந்தார். அப்போது அவர் அனுபவம் வாய்ந்த விமானி. மொத்தம் 9,750 மணி நேரத்துக்கு விமானத்தை ஓட்டிய அனுபவம் அவருக்கு உள்ளது. இதில் 6,400 மணி நேரம் தலைமை விமானியாக பணியாற்றி இருக்கிறார்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்," நாயகன் எண்ணற்ற பயணிகளை காப்பாற்றியவர் "என்று அவரை பாராட்டியிருக்கிறது. மச்சார் விமானியாக வேண்டும் என்ற கனவுடன் தனது படிப்பை தொடங்கியவர் அல்ல.

அவர்களின் குடும்பத் தொழில் தானும் பங்களிக்க வேண்டும் என்று தான் விரும்பினார்.

அதனால்தான் அவர் மேலாண்மை படிப்பில் சேர்ந்து இருந்தார்.

2026902044304639.jpeg

ஒரு விமான போக்குவரத்து கருத்தரங்கில் பங்கேற்றதற்குப் பிறகு அவருக்கு விமானியாக வேண்டும் என்று ஆர்வம் துளிர்த்ததாம். பலருக்கு பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார்.

தன்னுடன் பணியாற்றிய பல மூத்த விமானிகளிடம், சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஸ்மித்.

அவரின் அனுபவம் அவரது அற்பணிப்பு இன்று அவரை நிஜ ஹீரோ வாக்கியிருக்கிறது.

இறைவன் அருளால் இன்னொரு விமானக் கதை சுபமாக முடிந்திருக்கிறது.

அந்த பயணிகளின் எஞ்சிய வாழ்நாளில் இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் உள்ளே என்ன நடந்திருக்கிறது என்பது தெரியாமல், இது உலக அரசியல் அரங்கில் வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அப்படி நடக்காமல் ஒரு நல்ல மகனை வீரனை பெற்ற பூபேந்திரபாய், கீதா பென் என்ற பெற்றோர்களுக்கு ஒரு சல்யூட்.

தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் விகடகவியின் ஆகப் பெரிய சல்யூட் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு !!