தொடர்கள்
விகடகவியார்
துபாய் விமான சதி இன்னும் விலகாத சஸ்பென்ஸ்

2026909205133439.jpeg

ஃபிளைதுபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் இரண்டுமே இந்த சம்பவம் பற்றி உடனடியாக கருத்து சொல்லவில்லை. சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஐக்கிய எமிரேட் மச்சார் ஒரு உண்மையான ஹீரோ என்று பாராட்டி இருக்கிறது.

சவுதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியது மச்சார் மற்றும் துணை விமானிக்கு அங்கு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை அளிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே சவுதி அரேபியா அவர்களை ஐக்கிய எமிரேட்க்கு அனுப்பி விட்டது. அதாவது தாங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள்.

துணை விமானி பற்றியும் பல விவரங்களை ஐக்கிய எமிரேட்ஸ் சேகரித்து வைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் உடனடியாக சொல்லவில்லை.

முதல் தடவையாக துணை விமானியாக இருந்தவர் பெயர் ஹமாம் அல்-ஹம்மாமி அவர்தான் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஸ்மித்மாச்சாரை கத்தியால் குத்தியவர்.

அவர் 2024 ஓமன் ஏர் நிறுவனத்தில் துணை விமானியாக பயிற்சியில் இருந்தபோதே அவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அவர் விமானங்கள் இயக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டவர்.

அவர் நிர்வாக ரீதியான பணியில் தொடர அனுமதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தது.

இந்த தகவல் எல்லாம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் புலனாய்வு செய்து வெளியிட்டவைதான்.

இதே மாதிரி ஃபிளைதுபாய் விமான நிறுவனமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. டெல்அவிவ் நகருக்கான விமான சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பற்றி முழு விசாரணை நடக்கிறது. என்று தெரிவித்திருக்கிறது.

விமானத்தை ஓட்ட தடை விதிக்கப்பட்ட போதும் அவர் எப்படி விமானம் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என்பது பற்றி அந்த விமான நிறுவனம் இது வரை எந்த தகவலும் பகிரவில்லை. ஐக்கிய எமிரேட் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டு வருகிறது.

எல்லா தகவல்களையும் பொதுவெளியில் சொல்வது விசாரணையை பாதிக்கும் தேவையற்ற அழுத்தங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை சிக்கல்கள் காரணமாக நாங்கள் எதையும் தற்சமயம் வெளியிட மாட்டோம்.

குற்றத்துக்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஐக்கிய எமிரேடு நடந்தது ஒரு பயங்கரவாத செயல் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐக்கிய எமிரேட் அதிபரின் ராஜாங்க ஆலோசகர் இந்த சம்பவம் பற்றிய குறிப்பிடும் போது மச்சார் பாராட்டுக்குரியவர் ,கடுமையான பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சாத்தியமான பேரழிவு எதிர்கொண்ட போதிலும் அவர் உண்மையான தைரியத்தையும் பொறுப்பையும் வெளிப்படுத்தினார் என்று பாராட்டியிருக்கிறார்.

கூடவே நிகழ்வுகளின் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் அல்லது “ சதி கோட்பாடுகளின் பரவலுக்கு அப்பால் பயங்கரவாத அச்சுறுத்துகளை கையாள்வதில் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் " என்றும் அவர் கருத்து சொல்லி இருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமர் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் ஈர்ப்பு கொண்டவர், விமானத்தில் இருந்த சிலருடன் சேர்ந்து அதை விபத்துக்கு உள்ளாக்கும் எண்ணத்துடன் வந்திருக்கிறார் என்றும் சொல்கிறார் .

இஸ்ரேல் பிரதமரின் கருத்தை உறுதிப்படுத்துவது போல் ஒரு பயணியின் பேட்டி இருக்கிறது ."விமானியைத் தாக்கியத் துணை விமானியைத் நாங்களும் தாக்கி குண்டு கட்டாக தூக்கி வந்து, ஹெட்போன் ஓயர்களால் அவரைக் கட்டி வைத்தோம். அப்போது விமான பணியாளர்கள் சிலர், எங்களுடன் தகராறு செய்தார்கள். அவரை விடுவிக்க வேண்டும் என்று கடுமையாக பேசினார்கள்.

அவர்கள் மீதும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தீவிரவாதியை விடுவிக்க சொல்கிறீர்களா? அது நடக்காது. உங்கள் பேச்சை நாங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எங்கள் பேச்சைக் கேளுங்கள்.

உங்கள் இருக்கைக்கு செல்லுங்கள் என்று அவர்களை எச்சரித்தபோது அவரை கொல்லப் போகிறீர்களா? என்று கேட்டார்கள். அவரை நாங்கள் கொல்ல மாட்டோம் அவர் பிறரை கொல்லவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம் ."என்று அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டித் தந்திருக்கிறார்கள்.

துணை விமானி ஹமாம் அல்- ஹமாமி மட்டும் தனியாக இந்த சதி செயலில் ஈடுபடவில்லை அவருக்குப் பின் வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள் என்பதை இஸ்ரேல் புலனாய்வுக்குழு ஐக்கிய எமிரேட் விசாரணைக் குழுவிற்கு சொல்லியிருக்கிறது. ஐக்கிய எமிரேட் விசாரணைக் குழு உடன் இணைந்து இஸ்ரேல் விசாரணைக் குழுவும் அந்தத் துணை விமானியை தற்சமயம் விசாரித்து வருகிறது.

துணை விமானி எட்டு மாதங்களுக்கு முன்பு தான் ஃபிளை துபாய் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்து இருக்கிறார். இவரது விண்ணப்பத்தை பரிந்துரை செய்தவர்கள் யார் என்ற விவரங்களையும் சேகரித்த ஐக்கியஎமிரேட் அவர்களையும் விசாரணை வளையத்தில் இணைத்து இருக்கிறது."உங்கள சதி திட்டம் தான் உண்மையில் என்ன?" என்று கேட்டதற்கு," அதுதான் நடக்கவில்லையே ? அது பற்றி பேசி என்ன பயன்? "என்று பதில் சொல்லி இருக்கிறார் ஹமாம் அல்- ஹமாமி.

இன்னொரு கேள்விக்கு அவர் பதில் சொல்லும் போது," என்னுடைய தாக்குதல் இஸ்ரேல் நகரத்தை குறி வைத்துதான்" என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தடை செய்யப்பட்ட விமானி இஸ்ரேலிடம் தூதராக உறவு இல்லாத போது அவரை விமானத்தின் காக்பிட்டில் முதல் அதிகாரியாக எவ்வாறு நுழைந்தார் ? ஓமன் இது பற்றி பெரிதாக எதுவும் ஏன் இன்னும் பேசவில்லை ? தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் ஈர்ப்பு கொண்டவர் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கும் எண்ணத்துடன் வந்திருந்தார் என்ற இஸ்ரேல் அதிபரின் கருத்து போன்றவற்றையும் விசாரணை அமைப்புகள் தங்கள் கவனத்தில் கொண்டுள்ளது. ஐக்கிய எமிரேட்ஸ் குற்ற சட்டத்தின் படி விசாரணை முடிந்து தண்டனை வழங்கும் போது தான் எல்லா விவரங்களையும் சொல்வார்கள் என்கிறார்கள்.

அதுவரை நாம் காத்திருப்போம்.