
ஆட்சி தொடர உங்கள் ஆதரவு தேவை இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் மக்களிடம் கோரிக்கை.
ஆமா, கூட்டணி கட்சிகள் டார்ச்சர் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு !!
என் நான்கு கேள்விகளுக்கு பதில் உண்டா சி எம் சார் ? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி.
கேள்வி மட்டும் தான் கேப்பாரு, பதிலுக்கு எல்லாம் வாய்ப்பில்லை?
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேரளா அரசு உத்தரவு.
பழிக்குப் பழி ?
இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கலெக்டர் முன்பு ஆஜரான வாக்காளர்கள்.
தேர்தல் ஆணையத்துக்கு கட்டம் சரியில்லை. ஏதாவது பரிகார பூஜை நடத்துவது நல்லது !!
கட்சிக்கு திரும்ப மம்தா 15 நாள் கெடு.
நீங்க எத்தனை 15 நாள் சொன்னாலும் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இல்லை !!
அதிமுகவிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விலகல்.தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவுக்கு இப்போது இலையுதிர் காலம் !!
இந்தியா கூட்டணி போராட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பார் மாணிக்கம் தாகூர் பேட்டி.
நெசமாவா சொல்றீங்க ?
தெருத்தெருவா சுற்றி வரும் "சி எம் சார்" இந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல்.
உங்களுக்கு பயம் புடிச்சிருக்கு !! அவருக்கு கொத்து பரோட்டா புடிச்சிருக்கு
கோழி திருடினால் கோழி திருடன். எம்எல்ஏ திருடினால் .....? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.
அவங்க திருடல, ஏதோ விலைக்கு வாங்கினதா தானே பேச்சு ?
இடைத்தேர்தலில் ஊரையே விலை பேசுகின்றனர். ஆளுங்கட்சி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு.
மொத்தமா வாங்கினா விலை சல்லிஸா இருக்கும்னு, லாட்டரி வியாபாரிக்கு தெரிந்திருக்கும் !!
வாக்காளர் பெயர் பதிவுக்கு விரைவில் சிறப்பு முகாம். மாவட்ட ஆட்சியாளர் தகவல்.
தேர்தல் ஆணையத்துக்கு என்று தனிதுறை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்பது போல் தெரிகிறது ?
'சத்யா கிரகம்' தொடங்கினார் ராகுல் காந்தி.
பாவம், அவர் இருக்கிறார் என்பதற்காக ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது !!

Leave a comment
Upload