தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

பூஜா ஹெக்டே

"நான் வதந்திகளையும், கிசுகிசுக்களை கண்டுகொள்ள மாட்டேன் .எனக்கே தெரியாத என்னைப் பற்றிய பல விஷயங்கள் எப்படி வருகின்றன? என்று நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது "என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

ஐஸ்வர்யா லட்சுமி

2026909191219727.jpg

சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்தது போதும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஜாலியான காதல் படங்களில் நடிக்க விரும்புகிறார் .தற்சமயம் 'லவ் 'என்று வெப் தொடரில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்கிறார்.

ராஷ்மிகா

2026909190248869.jpg

'"மைசா' படத்தில் 90 அடி உயர நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கச் சொன்னார் இயக்குனர். மலை உச்சியில் வேகமாக ஓடச் சொன்னார். விழுந்து அடிபட்டால் நான் நடிக்கும் மற்ற படங்கள் பாதிக்கும் என்று சொன்ன போதும் அவர் விடவில்லை " என்று ஜாலியாக இயக்குனர் மீது புகார் சொல்கிறார் ரஷ்மிகா.

ஸ்ருதிஹாசன்

2026909191424477.jpg

தற்போது விஜய் சேதுபதியுடன் 'ட்ரெயின்' படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் துல்கர் சல்மானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

மாளவிகா மோகனன்

202690918492265.jpg

'பாக்கெட் நாவல்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன், "இந்த படத்திற்காக நான் நீண்ட நாள் காத்திருந்தேன்” என்கிறார்.

மமிதா பைஜூ

2026909184127165.jpg

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என்று மும்மொழிகளில் தயாராகும் படங்களுக்கு தற்சமயம் முக்கியத்துவம் தருகிறார் நடிகை மமிதா பைஜூ.

திரிஷா

2026909184414155.jpg

"யாருக்காகவும் என் நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். எப்போதும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் " தன்மீது அவதூறு பரப்பும் நெட்டிசன்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார் நடிகை திரிஷா..

தனுஷ்

தனுஷ் ஏற்கனவே 'ஓம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்திற்கு பெயர் தமிழ் முருகன்.ஏற்கனவே கருப்பண்ணசாமி சம்பந்தப்பட்ட கிராமத்து கதையில் நடிக்கிறார். இப்படி பக்தி கலந்த கதைகளில் அவருடைய ஆர்வம் ஏதோ திட்டத்துடன் செயல்படுவது போல் இருக்கிறதாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

2026909184732838.jpg

கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களில் ஜொள்ளு விட வைக்கிறது.