
பகுதி 3: “பள்ளியிலிருந்து அழைப்பு வந்தா…?”
மதிப்பீடு, புரிதல், கல்வித் திட்டம்
“உங்க குழந்தையைப் பற்றி கொஞ்சம் பேசணும்” என்று பள்ளியிலிருந்து அழைப்பு வந்தாலே சில பெற்றோருக்கு வயிற்றுக்குள்ள ஒரு பயம் வரும்.
ஆனா பள்ளியிலிருந்து வரும் அந்த அழைப்பு ஒரு தீர்ப்பு கிடையாது. குழந்தைக்கு எங்க சிரமம் இருக்கு என்பதைப் புரிஞ்சுக்குறதற்கான முதல் படியாகவும் அது இருக்கலாம்.
இந்தப் பகுதியில், ஆரம்பத்திலேயே உதவி கிடைக்கறது ஏன் முக்கியம், ஆசிரியரை எப்படி சந்திக்கலாம், மதிப்பீடு எப்படி நடக்கும், IEP என்றால் என்ன, பெற்றோராக நம்ம பங்கு என்ன என்பதை எளிமையாகப் பார்ப்போம்.
இதில் பார்க்கப்போவது:
- ஆரம்பத்திலேயே உதவி கிடைத்தால் என்ன பயன்?
- ஆசிரியரை முதல் முறை சந்திக்கும்போது என்ன பேசலாம்?
- மதிப்பீடு எப்படி நடக்கும்?
- IEP என்றால் என்ன? அது குழந்தைக்கு எப்படி உதவும்?
- இந்த முழு செயல்முறையில் பெற்றோருக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன?
முக்கியமான விஷயம்:
பெற்றோர் வெளியில் நின்னு பார்த்துக்கிட்டிருக்கிறவர்கள் இல்ல. குழந்தையைப் பற்றி நிறைய தெரிஞ்சவர்கள். அதனால இந்தக் குழுவில் பெற்றோருக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கு.

"பிருந்தா ரகுநாத்"
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.

Leave a comment
Upload