தொடர்கள்
அரசியல்
தமிழகத்தில் தொடரும் விசில் சத்தம் !! - விகடகவியார்

202691007501000.jpeg

(நெற்றியில் இருக்கும் அரகஜா தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறது)

தாராபுரம், மதுராந்தகம் ,இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு நிறைய சங்கடங்கள் இருந்தன.

குறிப்பாக வெற்றி பெற்ற சில நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து கட்சி மாறி மீண்டும் வாக்கு கேட்க வந்திருக்கிறார் என்ற விமர்சனத்தினால் மக்களிடையே கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது.

எதிர்க்கட்சிகளும் இந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தது.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே திருடுகிறது என்ற விமர்சனத்தை திமுக மற்றும் அதிமுக இரண்டுமே தொடர்ந்து செய்து கொண்டிருந்தது.

2026910055524803.jpg

விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திமுகவை தீய சக்தி என்று சொல்லி அரசியல் செய்தார்கள்.

அந்த தீய சக்தியின் துணையுடன் எடப்பாடி ஆட்சி அமைக்க முயற்சி செய்தார் என்று திரும்பத் திரும்ப தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் இரண்டு தொகுதிகளிலும் சொல்லி பிரச்சாரம் செய்தார்கள்.

முதல்வர் விஜயும் இதையே சொன்னார்.

திமுகவுக்கும் எங்களுக்கும் போட்டி என்று சொன்ன முதல்வர் ஜோசப் விஜய் அதிமுகவை மற்றும் பலர் என்று அழைத்தார்.

சட்டமன்றத் தேர்தலின் போதும் இதையேதான் சொல்லியிருந்தார். அதிமுகவுக்கு இந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு இல்லை நடுநிலை என்று சொன்னது கொஞ்சம் பின்னடைவாக இருந்தது.

2026910055600422.jpg
ஆரம்பத்தில் உளவுத்துறை இரண்டு இடத்திலும் இரட்டை இலைக்கு என்று தனி செல்வாக்கு இருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது என்ற உண்மையை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றது

. அதன் பிறகு தான் முதல்வர் மதுராந்தகம் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் . வந்து வாக்கு சேகரித்தார்

தமிழக வெற்றி க் கழகத்திற்கு பின்னடைவு என்று குறிப்பிட வேண்டுமென்றால் ஆட்சிக்கு ஆதரவு தரும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேட்பாளரை நிறுத்தியதோடு இல்லாமல் தமிழக வெற்றி க்கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பின்வாங்கியது அது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் வேட்பாளரை நிறுத்தியது.

மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் சட்டமன்ற றுப்பினர்கள்,முன்னாள் அமைச்சர்கள் எல்லோரையும் களம் இறக்கியது திமுக 500 வாக்காளர்களுக்கு ஒருவர் என்று காலை மாலை இரண்டு வேளையும் வாக்காளர்களை சந்தித்து திமுகவிற்கு வாக்கு சேகரிப்பது தான் இவர்கள் வேலை. கிட்டத்தட்ட இதே பாணியை அதிமுகவும் செய்தது.

இந்த தேர்தலில் ஏற்கனவே அறிவித்தபடி தமிழக வெற்றிக் கழகம் வாக்குக்கு பணம் தரவில்லை.

எனவே அதிமுக திமுகவும் நாமும் வாக்குக்கு பணம் தர வேண்டாம் என்று முடிவு செய்தது. அதே சமயம் இரண்டு கட்சிகளும் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு பணம் தந்து தேர்தல் வேலை பார்க்க வைத்தது.


மதுராந்தரத்தைப் பொறுத்தவரைஆளுங்கட்சிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும்போது தொடங்கிய முன்னிலை முன்னிலைஅதே நிலையில் தொடர்ந்தது.

இரண்டாவது இடத்துக்கு தான் அதிமுகவும் திமுகவும் முன்னே பின்னே என்று கண்ணாமூச்சி ஆடியது. தாராபுரத்தை பொருத்தவரை ஒரு கட்டத்தில் அதாவது முதல் மூன்று சுற்றுகளில் அதிமுக முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு தமிழக வெற்றி கழகம் முன்னிலை என்று நிலைமை மாறியது.

இதைவிட வேடிக்கை முன்னிலையில் இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு போனது. திமுக இரண்டாவது இடத்துக்கு வந்தது.

தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக முதல்வர் இது மக்களின் வெற்றி என்று வெற்றியை மக்களிடம் தந்து விட்டார் இந்த வெற்றிக்கு அவர் உரிமை கொண்டாடவில்லை.

2026910072918224.jpg

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளை விட கூடுதல் வாக்கு வாங்கியது. இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலத்த பின்னடைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆதரவு வாபஸ் அல்லது தொடருமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

தமிழக வெற்றிக்காக அமைச்சர்கள் இந்த வெற்றி எங்கள் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்கிறார்கள். அதே சமயம் அதிமுக முற்றிலும் தனது ஆதரவை இழந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.இது திமுகவுக்கும் பொருந்தும்.

எதிர்க்கட்சிகள் சுதாரித்துக் கொண்டு தங்கள் வியூகத்தை மாற்றக்கூடும்.

இப்போதும் கூட 35 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு என்றாலும் 65 சதவீத மக்கள் திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களித்து தங்கள் ஆதரவை பதிவு செய்து இருக்கிறார்கள்.

காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அது சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் நிச்சயம் வந்துவிடும்.

தேர்தல் நடத்த தடையில்லை என்றால் விரைவில் தேர்தல் நடத்தப்படும். எல்லாமே அந்த தீர்ப்பை பொறுத்து தான் இருக்கிறது.

விசில் சத்தம் கொஞ்சம் குறைவாகத் தான் கேட்கிறது என்றாலும், விசில் சத்தம் தொடர்கிறது.

சந்தேகமேயில்லை.