தொடர்கள்
விகடகவியார்
உலகத் தலைவர் மோடி !! வெள்ளி விழா வருடம் !! - ஜாசன்

2026909194244148.jpg

பிரதமர் நரேந்திர மோடி இன்று வயது இப்போது 76.

பிரதமர் மோடியின் இந்த 25 ஆண்டு காலம்..... உலகத் தலைவர்கள் அவரை கொண்டாடினாலும் இந்தியாவில் இன்று வரை அவர் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

அந்த விமர்சனங்கள் அவர் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அவர் அந்த விமர்சனங்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்வதும் இல்லை.

2001 அக்டோபர் ஏழாம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றார்.

2014 வரை குஜராத் முதல்வராக தொடர்ந்தார்.

2013-இல் பாரதிய ஜனதா அவரை பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்தியது.

பாரதிய ஜனதா அல்லது அதன் முந்தைய பெயரான ஜனசங்கம், வாக்கு வங்கி அரசியல் ஆட்சி அதிகாரம் இவற்றையெல்லாம் முன் நிறுத்தாது.

இதெல்லாம் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள்.

பாஜக சித்தாந்த அடிப்படையில் அரசியல் செய்யும். அவர்கள் கொள்கை என்று சொல்வதென்றால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கப்பட வேண்டும்,

ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்,

இந்துத்துவா கொள்கையை நிலை நிறுத்த வேண்டும் இப்படித்தான் அவர்கள் அரசியல் நிலைப்பாடு இருந்தது.

முதல்வர் மோடியும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவர் தான்.

அவர் ஒரு இந்துத்துவாவாதி அவருக்கு அமெரிக்காவுக்கான விசா தரக்கூடாது என்று அமெரிக்க தூதரகத்திற்கு சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள் கையெழுத்து போட்டு மனு அளித்திருக்கிறார்கள்.

இன்று அமெரிக்கா அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என் இனிய நண்பர் மோடி என்கிறார்.

1967-இல் ஜனசங்க கட்சியின் குழு தலைவராக இருந்த வாஜ்பாய் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை நீக்க வேண்டும் என்று தனித் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த அரசியல் கட்சிகள் கூட வாஜ்பாயின் அந்த தனி தீர்மானத்தை ஆதரிக்கவில்லை.

அப்போது வாஜ்பாய் இந்த அவையில் என்னுடைய கோரிக்கைக்கு பெரிய அளவு ஆதரவே இல்லை என்பது தெரிகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறது. ஆனால், அந்த அரசியல் நிர்ணய சட்டம் காஷ்மீர் விவகாரத்தில் அது ஒரு முடங்கிப்போன சட்டமாகத்தான் இருக்கிறது.

அரசியல் நிர்ணய சட்டப்படி எல்லா மாநிலங்களும் இயங்குகிறது.

காஷ்மீரை தவிர. குடியரசுத் தலைவர் அங்கு ஒரு தபால் நிலையம் திறக்க வேண்டும் என்று முடிவு செய்தால் கூட அதற்கு காஷ்மீர் சட்டப்பேரவை ஒப்புதல் தர வேண்டும்.

இது உங்களுக்கு முரண்பாடாக தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் நிச்சயம் ஒரு நாள் ஆட்சிக்கு வருவோம் அப்போது இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று உறுதிப்பட சொன்னார்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனாலும், அவரால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. ஆனால் அதை மோடி செயல்படுத்தி காட்டினார். ராமர் கோயிலுக்கும் இது பொருந்தும். 800 வருடங்களாக நடக்கும் ஒரு சட்ட போராட்டத்தை தீர்த்து வைத்தார்.

நரேந்திர மோடி மீது சொல்லப்படும் பொதுவான குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளை முடக்குகிறார் என்றும், மதவாதக் கொள்கைகளை பரப்புகிறார். பாராளுமன்றத்தில் அவரது செயல்பாடு பெரிதாக இல்லை.

இவ்வாறு தான் அவர்களால் விமர்சிக்க முடிகிறது. இவை எல்லாம் ஓரளவு உண்மைதான் என்றாலும் எதிர்க்கட்சிகளால் நரேந்திர மோடியை தாண்டி மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

ஜனசங்க கட்சியோ பாரதிய ஜனதாவோ தனிமனிதரை நம்பி அந்தக் கட்சி என்றுமே இல்லை.

இப்போது அப்படி ஆகிவிடுமோ என்று அச்சம் எனக்கு இருக்கிறது "என்று நரேந்திர மோடியையும் அமித் ஷாவையும் மறைமுகமாக குறிப்பிட்டு பொது மேடையில் பேசினார்.

பாரதிய ஜனதாவின் முகமாக இன்றைக்கும் நரேந்திர மோடியே இருக்கிறார்.

நரேந்திர மோடி பெரிய அரசியல் அரசியல் வியூகவாதி அல்ல. அதெல்லாம் அமித்ஷா பார்த்துக் கொள்கிறார்.

நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பள்ளியில் படித்தவர் தான்.

அவருக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தெரியும்தான்.

இப்போது கூட கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.

இதெல்லாம் பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.

இருப்பினும் அவரை தவிர எதிரே யார் என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. உலக அரங்கில் இன்று இந்தியா நிமிர்ந்து நிற்பதற்கு மோடி மட்டுமே காரணம் என்பது மட்டும் நிதர்சனம்.

சொல்லப்போனால் இந்தியாவின் தலைவர் என்பதை விட மோடி உலகத் தலைவர் என்ற பிம்பம் மிக ஆழமாக கட்டமைக்கப்பட்டு விட்டது.