தொடர்கள்
விகடகவியார்
தமிழகத்தின் தலையெழுத்து !! வரிசை கட்டும் ஹீரோக்கள் !! லைட் பாய்.

2026910062530733.jpeg

நடிகர் ஜோசப் விஜய் கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே முதல்வர் ஆகிவிட்டார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் முதல்வர் பதவி மீது ஆசை வந்திருக்கிறது. தனுஷ் நடவடிக்கைகள் அவசரப்படாமல் நிதானமாக இருக்கிறது. சூர்யா, 'அதெல்லாம் இல்லை' என்று மறுத்தாலும், அவருடைய காய் நகர்த்தலும் நிதானமாகவும் ஆனால், கொஞ்சம் ரகசியமாக நடக்கிறது. சிவகார்த்திகேயன் இப்போது அந்த பட்டியலில் இருக்கிறார். 'எஸ்.கே.' என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற சிவகார்த்திகேயன் சமீபத்தில் சென்னை போரூர் அருகே உள்ள பரணி புத்தூரில் அகில இந்திய நற்பணி இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.

மேடையில் முகப்பு தோற்றம் தலைமைச் செயலகம் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வெள்ளை உடையில் வந்திருந்தார்கள். மேடையில் சிவகார்த்திகேயன் தோன்றியதும் அவரது ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களும் அரசியல் சார்புடையதாக இருந்தது. 'வருங்கால முதல்வர் சிவகார்த்திகேயன் ' என்ற ரசிகர்களின் கோஷத்தை ரசித்து அங்கீகரித்தார் 'எஸ்.கே.'.

2026910062642332.jpg

கூட்டத்தில் பேசிய சிவகார்த்திகேயன் "நீங்கள் என்னை சுயமாக உருவாகிய நட்சத்திரம் என்று அழைக்கிறீர்கள். ஆனால் என்னை நட்சத்திரமாகியது மக்கள்தான். மக்கள் நட்சத்திரம் நான். நானும் விஜய் சேதுபதியும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்கள். மிமிக்கிரி ஆர்டிஸ்ட், நிகழ்ச்சித் தொகுப்பாளர் இப்படி எல்லாம் இருந்தால் நடிகராக ஜொலிக்க முடியாது என்று சொன்னார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் நான் நடிகராக நிலைக்கிறேன் .நம்மை விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள் .நமது நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .நன்றாக படியுங்கள். நன்றாக சம்பாதியுங்கள். குடும்பத்துக்கு எப்போதும் முதலிடம் கொடுங்கள். 15 நிமிடங்கள் புத்தகங்களை படியுங்கள். நாம் எவ்வளவு அதிகமாக படிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நமது சிந்தனை திறன் மேம்படும் " என்று பேசிய சிவகார்த்திகேயன் "சமூக ஊடகங்களிலிருந்து இருந்து விலகி இருங்கள்" என்று ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

முன்னணி நாயகர்கள் வரிசையில் இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கூட்டி தனது பலத்தை காட்டியிருக்கிறார். அவரது அடுத்த கட்ட நகர்வு அரசியல் நோக்கி தான் என்கிறார்கள் ரசிகர்கள். அதேசமயம் ஒரு மேடையில் சிவகார்த்திகேயன் பற்றி நடிகராக இருந்தபோது விஜய் சொன்னது," குழந்தைகளை அவர் கவர்ந்து விட்டார் அதை நான் எங்கள் வீட்டிலேயே உணர்ந்தேன் " என்று சொன்னார். குழந்தைகள் பேச்சை நம்பி பெரியவர்கள் ஓட்டு போட்டு ஜோசப் விஜய் முதல்வர் ஆகிவிட்டார் என்ற திமுக தலைவர்களின் புலம்பலையும் இந்த கருத்தோடு பொருத்திப் பாருங்கள். சரியாக இருக்கும்.