
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வென்றார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
தட்டஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடை தேர்தல் நடந்தது.
அகில என். ஆர் . காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் அசோக் போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இ. விநாயகம் போட்டியிட்டார்.
இவருக்கு தமிழக வெற்றி கழகம் தெரிவித்தது. திமுக சார்பாக கே சேது என்ற சேது செல்வம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இது தவிர இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டி போட்டது

ஒன்பதாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட போது என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13 ஆயிரத்து 358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இ. விநாயகம் 4876 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். என் ஆர் காங்கிரஸ் 8482 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திமுக வேட்பாளர் கே சேது என்ற சேது செல்வம் 266 4வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் .திமுக வேட்பாளர் உட்பட ஒன்பது பேர் டெபாசிட் இழந்தனர்.
ஒரு காலத்தில் பாண்டிச்சேரி திமுக மற்றும் அதிமுக கோட்டையாக இருந்தது.
அதன் பிறகு காங்கிரஸ் ஆளுங் கட்சியானது .இப்போது அதெல்லாம் பழம் கதை என்று ஆகிவிட்டது .அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டுமே பாண்டிச்சேரியில் செல்வாக்குள்ள ஒரு தலைவராக இன்னொரு காமராஜராக அங்கு மக்களால் கொண்டாடப்படுகிறார்.
விஜய்க்கு நெருக்கமானவரான அமைச்சர் ஆனந்த் முன்னாள் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர். அவர் மூலம் என். ரங்கசாமிக்கு நெருக்கமாக இருந்தார் ஜோசப் விஜய் .
தமிழக வெற்றி கழகம் என் .ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிட இருந்தது. அதற்குள் பாஜக முந்திவிட்டது எனவே தமிழக வெற்றி கழகம் பாண்டிச்சேரியில் கூட்டணி அமைக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்றாகி விட்டது
டெபாசிட் இழந்தது திமுக என்ற தலைப்பு நிச்சயம் திமுக காரர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று தான்.

Leave a comment
Upload