தொடர்கள்
பொது
பயம் வேண்டாம், புரிதல் போதும் - பிருந்தா ரகுநாத்

கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டி

பகுதி 5: “நம்பிக்கையோட எதிர்காலத்தைப் பார்க்கலாம்”

எதிர்பார்ப்பு, திறமை, எதிர்காலம், பெற்றோரின் நலன்

“இப்போ படிக்க இவ்வளவு கஷ்டப்படுற குழந்தை நாளைக்கு என்ன பண்ணும்?” என்ற கேள்வி பெற்றோருக்கு வருவது இயல்புதான்.

ஆனா ஒரு குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பது மதிப்பெண் மட்டும் இல்ல. குழந்தையின் திறமைகள், கிடைக்கிற ஆதரவு, சரியான கல்வி வாய்ப்புகள், சுற்றியிருக்கிறவர்களின் புரிதல் என்று பல விஷயங்கள் அதில் இருக்கின்றன.

இந்தப் பகுதியில், குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி நாம எப்படி யதார்த்தமாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையோடும் பார்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.

இதில் பார்க்கப்போவது:

- குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கிற விஷயங்களில் நம்மால் என்ன செய்ய முடியும்?
- குழந்தையிடம் எவ்வளவு எதிர்பார்க்கலாம்?
- எதிர்பார்ப்புக்கும் அழுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்?
- கற்றல் சிரமம் இருந்தும் தங்கள் துறையில் முன்னேறியவர்களின் உதாரணங்கள்
- பள்ளிக்குப் பிறகு கல்வி, திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள்
- குழந்தையைப் பார்த்துக்கிற பெற்றோரும் தங்களைப் பார்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

முக்கியமான விஷயம்:
கற்றல் குறைபாடு என்பது குழந்தையின் எதிர்காலத்துக்கான ஒரு தீர்ப்பு கிடையாது. குழந்தைக்கு எதில் சிரமம் இருக்கிறது என்பதைப் புரிஞ்சுக்கிட்டு, எதில் திறமை இருக்கிறது என்பதையும் பார்த்து, அந்தப் பலத்தை வளர்க்க உதவினா, முன்னேறுவதற்கான வழிகள் நிறைய இருக்கின்றன.
2026923231838155.jpg

"பிருந்தா ரகுநாத்"
குழந்தைகள் சிறப்பு கல்வி ஆலோசகர்,
மாண்டிசோரி பயிற்சியாளர்.
98418 83569.