தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 100 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2026920131855189.jpeg
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் - 27

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் இருபத்தி ஏழாவது பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .

சென்ற வாரத்தின் தொடர்ச்சி. காஞ்சி மடத்தின் வாசலில் நடைபெற்ற கடவுள் மறுப்பு மற்றும் ஒழிப்பு கூட்டத்தினருக்கு நீர் மோர் வழங்க ஸ்ரீ மகா பெரியவா உத்தரவிட்டதை தொடர்ந்து மேலும் சிலர் அவரை தவறாக மேடையில் பேசினார். அதன் பின் ஸ்ரீ பெரியவாளின் கருணை புரிந்து பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அருள் செய்து பிணியை போக்கி ஆட்கொண்டார் ஸ்ரீ பெரியவா. அவருக்கு பகுத்தறிவு குறித்த விளக்கத்தையும் அளிக்கிறார் இந்த வாரம். காணாமல் போன தன் மகனை தேடும் தம்பதியினருக்கும் தங்க மக கிடைத்துவிடுவான் என்று ஆசி கூறுகிறார்.