மும்பை மட்டுங்கா ஏரியா
அங்கு கண்ட காட்சி கலங்க வைத்தது.
ஒரு சிறுவன் பெல்ட் கயிறு கழுத்தில் மாட்டிய ஒரு வளர்த்தியான கருப்பு நிற நாயுடன் என்னை நெருங்கியபடி ஓடி வந்து கொண்டிருந்தான்.
அதன் ஓட்டத்தில் ஒரு தொய்வு தெரிந்தது. கஷ்டப்பட்டுக்கொண்டு ஒடி வருவது போல இருந்தது.

உற்றுப் பார்த்தேன். வலது முன்னங்கால் இல்லை. ஆம் மூன்று காலில் குதித்து குதித்து ஓடி வந்து கொண்டிருந்தது.
அந்த பையன் ஓடுவதை நிறுத்திவிட, நிறுத்தியவுடன் நாய் கீழே அமர்ந்து கொண்டுவிட்டது.

புற்றுநோய் என கண்டறியப்பட்டு அதன் வலது முன்னங்காலை வெட்டிவிட்டார்களாம் அதற்கு வைத்தியம் பார்த்த டாக்டர்.
அதனால் நிற்க முடியவில்லை. அந்த சிறுவன் அருகில் இருந்த இரண்டாவது மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தனது தாயிடம், மம்மி! போஸ்கோவைக் கூப்பிடுங்களேன். இப்படி சோர்ந்து அமர்ந்துவிட்டதே!" என்றான்

அவனது தாயாரும், செல்லமாக போஸ்கோவை அழைக்க துள்ளியதென்னவோ உண்மைதான், ஆனால் தத்தித் தத்தி அந்த சிறுவனுடன் அந்த் பில்டிங்கிற்குள் சென்றுகொண்டிருந்தது.
இறைவா வாயில்லா ஜீவனுக்கு என்ன கஷ்டம்..பாவம்.
இதற்கேற்றாற் போல வீல் வைத்த கால்கள் தேடினால் கிடைக்காதா என்ன ?? இருக்கும்.

Leave a comment
Upload