தொடர்கள்
பொது
வாட்ஸப் வெறியர்கள் இம்சை தாங்க முடியல..

ஜப்தி ரேட்டிலே ஸ்மார்ட் போனும், இண்டர்நெட்டும் வந்தாலும் வந்தது. வாட்ஸப் வெறியர்கள் இம்சை தாங்க முடியலை.

20171106162607672.jpg
இவங்களுக்கு பொழுது போகலைன்னா மோட்டு வளையைப்பார்த்து எதாவது ஒரு கதையை யோசிச்சு அதிலே யாராவது ஒரு பிரபலத்தைக் கோர்த்து விட்டுடுறாங்க. அதிலேயும் தமிழ் வாட்ஸப் வெறியர்களின் ஆதர்ச நாயகர் கர்ம வீரர் காமராஜர் தான்.

சாம்பிளுக்கு ஒரு இம்சை இங்கே...

 


‘இப்படித்தான் காமராஜர் சின்னப்பையனா இருந்தப்ப’, ‘இப்படித்தான் காமராஜர் வயக்காட்டு வழியா காரிலே போனப்ப’ என்று இவர்களாக அடித்து விடும் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை.

‘சீனப் போர் முடிஞ்சப்புறம் நேரு ரொம்ப கவலையா இருந்தாரு. காமராஜர் ‘என்ன விஷயம்னேன்’ அப்படின்னு கேட்டிருக்காரு. ’அமெரிக்கவிலேருந்து ஆயுதம் வாங்கனும். அதை இங்கே இறக்குமதி செய்ய அங்குள்ள பேங்க் கேரண்டி தேவை. ஆனால் இந்தியாவுக்குன்னா எந்த வங்கியும் கேரண்டி தர மாட்டேன்னுறாங்க’ என்று நேரு சொல்லிருக்காரு. உடனே காமராஜர், “அமெரிக்காக்காரன் கடை இங்க எதுவும் இருக்கா?’ன்னு கேட்டிருக்காரு. ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் இருக்கே’ன்னு நேரு பதில் சொல்ல, “அப்போ நமக்கு உபயோகப்படாத அது எதுக்கு இந்தியாவிலே இருக்கணுமுன்னேன். உடனே அதை மூடுங்க’ன்னுருக்காரு. நேருவும் அதைச் செய்யப் போக, அலறியடித்த அமெரிக்கா உடனே ஆயுதங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?’

- வாட்ஸப் வெறியர்களின் இந்தத் தகவலை உண்மை என்று நம்பி பிரபல மேடைப் பேச்சாளர் அதனை மேடைகளில் பேசி வருகிறார்.

என்னத்த சொல்ல?!

- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

­