பொய்கள்

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்
வாயால் மட்டுமே பேச முடியுமாம்…
இது வெறும் பொய்.
கண்ணால்தான் பார்க்க முடியுமாம்.
அது சுத்தப் பொய்
சண்டையால் பகைமையே வளருமாம்
இது வடிகட்டிய பொய்.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு வருமாம்.
இது மகா பொய்
கண்ணீர் துளி உவர்க்குமாம்
இது மாபெரும் பொய்.
இப்படிப் பொய் சொல்பவர்கள்
எல்லோரும் காதலிக்கத் தெரியாதவர்கள்.
காதலில் வாய் பேசாது, மனம் பேசும்.
காதலில் கண் பார்க்காது மனசு பார்க்கும்.
காதலில் சண்டைதான் நெருங்கச் செய்யும்
காதலில்தான் ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பின்னாலும்
ஒன்று தான் வரும்.
அது இரண்டும் பிரிந்தால் பூஜ்யம் ஆகிவிடும்
காதலில்தானடா
கண்ணீரும் இனிக்கும்.
காதலிக்கத் தெரியாதவர்கள் எல்லோருமே பொய்யர்கள்
பா. கிருஷ்ணன்

Leave a comment
Upload