தொடர்கள்
பொது
"பயத்தில் நீலகிரி"

-ஸ்வேதா அப்புதாஸ்

20171106161730479.jpg
தமிழகத்தில் எங்கு புயல் என்றாலும் உடனடியாக  நீலகிரி மாவட்டம் பாதிக்கப்படும்.
நவம்பர் மாதம் வந்துவிட்டாலே இங்குள்ள மக்களை தானாக பயம் கவ்விக் கொள்கிறது .
1993 நவம்பரில் புயல் வந்த போது குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பலர் மாண்டு போனார்கள் .
இந்த வருடம் நவம்பர் மாதம் முடிய தப்பித்தோம் என்று நினைக்க.. வந்தது ஓகி புயல்!
வியாழக்கிழமை துவங்கின மழை சனிக்கிழமை மதியம் தான் ஓய்ந்தது !.
வழக்கமான குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது .கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு பாதிப்பு அவ்வளவாக இல்லை.
சனிக்கிழமை பகல் 12.30 மணிக்கு ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள 120 வயதான பிரபல மோகன்ஸ் டிபார்ட்மென்டல் ஸ்டோர் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது .
அந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஐலேண்ட் டீ கடை இடிபாடுகளில் சிக்கியது. டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த பி எஸ் என் எல் ஊழியர் சுரேஷ் சிக்கி எலும்பு முறிவுடன் தப்பித்தார் .டீ கடையில் வேலை செய்த மஞ்ச சிவா நல்ல வேளையாக உயிர் தப்பித்தார் .
விடுமுறை என்பதால் மாவட்ட ஆட்சியர் ஊழியர்கள் தப்பித்தனர். ஊட்டி மாவட்ட ஆட்சியரும், காவல் துறையும் இணைந்து செயல்பட்டதால் ஊட்டியின் கிராமங்களில் கூட உயிர்ச்சேதம் இல்லை. 

இப்படிப்பட்ட நேரங்களில் மனிதாபிமானம் ஒன்று தான் ஆறுதலான விஷயம் !. 

 

Image may contain: outdoor

Image may contain: 1 person, walking, sky and outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: sky and outdoor

 

  1. Image may contain: outdoor

­