தொடர்கள்
இசை
டிசம்பர் ஆலாபனை! - மாயவரத்தான் சந்திரசேகரன்

 

மழை, சூறாவளி, வெள்ளம் என்று ஒருபக்கம் மிரட்டிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அடுத்த இசை விழாவிற்கு சென்னை தயாராகிவிட்டது. சென்னையை சுற்றி ஏறத்தாழ 20 சபாக்கள் களத்தில் இறங்குவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. நங்கநல்லூர் தாண்டி அவரசமாக மொட்டைமாடியில் கொட்டகைபோட்டு புதிதாக நாமகரணம் சூட்டும் சபாக்கள் இதில் அடங்காது. இசைவிழாவில் முந்திக்கொண்டது பாரதீய வித்யாபவன். நவம்பரிலேயே ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதரை அழைத்து கத்ரி கோபால்நாத், ஓ.எஸ்.அருண்,குச்சுப்புடி ஷைலஜா ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருதை தந்தது!. அப்புறம் யுனெஸ்கோவிற்கு நன்றி தெரிவிக்கும் படலம். இது டிசம்பர் சீசன் முழுவதும் தொடரும் என நம்பலாம்.

இந்த சீசனில் சென்னை மியூஸிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதை பெறுபவர் சித்ரவீணை ரவிகிரண் என்றால்,  தமிழிசை சங்கத்தின் 'இசை பேரறிஞர்' கெளரவம் புரட்சிப்பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு  ( சினிமா நடிகர்களுக்கு மட்டும்தான் பட்டங்கள் முளைக்குமா.... என்ன? ) 'விக்கு வினாயகராமை இந்த வருடமும் அகாடமி விட்டுவிட்டதே' என ஒரு கூட்டம் முகநூலில் கவலைப்படுகிறது. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின்  இசைப்பேரொளி 'மஹதிக்கு கிடைத்ததில்  'ஐயய்யோ புடிச்சிருக்கு' என்றபடி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி!

காரைக்குடி மணி-மயிலாப்பூர் ஸ்பைன் ஆர்ட்ஸ்.. சஞ்சய் சுப்பிரமணியம்-இந்தியன் பைன் ஆர்ட்ஸ்... டி.என்.சேஷகோபாலன் -நாரதகான சபா.. என்று பட்டப்பட்டியல் நீள்கிறது. வெண்தாடி வேந்தராகிவிட்ட ஜேசுதாஸை பார்த்தசாரதி சபா கெளரவிக்கிறது. “இசைவிழா சென்னையைத்தாண்டி தமிழகமெங்கும் நடக்கவேண்டும். நாதஸ்வர தவில் மங்கல இசையோடு நின்றுவிடக்கூடாது. தமிழ் பிரதானமாக பாடப்படவேண்டும்”போன்ற சடங்கான பேச்சுக்கள் இந்த டிசம்பரிலும் இடம்பெறும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

முதல் வரிசையில் நிற்கும் பாடகர்கள் என்றால் சஞ்சய், அபிஷேக் ரகுராம், ராமகிருஷ்ண மூர்த்தி, திருச்சூர் சகோதரர்கள் , குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா என்று ஒரு கைவிரலை விட்டு எண்ணிவிடலாம்

20171106140156274.jpg

20171106110618385.jpg

கலெக்ஷன் ரீதியாக பார்த்தால் அபிஷேக் ரகுராமும், சஞ்சயும் முதலிடம் வகிக்கிறார்கள். அப்புறம்தான் மற்றவர்கள். கடந்த இரண்டு சீசன்களாக திருச்சூர் சகோதர்களின் சங்கீதம் நல்ல விறுவிறுப்பு. ஒருகாலத்தில் பி.வி.ராமன், பி.வி லஷ்மணன் இப்படித்தான் ஞானத்தோடு  பாடினார்கள்.
பட்டுப்புடவைகளை பொறுத்தவரை ரஞ்சனி - காயத்ரி  வேகமாக முதல் இடத்தை தொட்டுவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ராதா - ஜெயலட்சுமி போன்று உயர்ந்த மடி சங்கீதம்.  எங்கு பாடினாலும் ஹால் வழிந்து மேடையை சுற்றி நூறு பேர் அமரும் அளவிற்கு கூட்டத்தை கூட்டி விடுகிறார்கள். நம்பர் ஒன் இடத்தில் அருணா சாய்ராம், சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, தொடர்வார்களா என்பது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்  அளவிற்கு சுவாரஷ்யம்.  கடந்த வருடமே சுதாவிற்கு அருணாவை ஒப்பிடும்  போது   பத்து சதவிகிதம் ஜனம் கம்மி என்றால் அவரது ரசிகர்கள் வம்புக்கு வருவார்கள் . ஆயினும் 'உண்மை அதுவே'


பேச்சு மாறமாட்டான் அவன்' என்று ஊர்ப்பக்கம் சொல்வதுபோல எத்தனை சீசன் வந்தாலும்  ஒரே பாட்டு பாடும் கூட்டம் ஒன்று உண்டு.  எந்த முன்னேற்றமும் இன்றி அதே காம்போதியையும் , கல்யாணியையும் தரும் இவர்களை ஒவ்வொரு நிமிடமும் நம்மால் யூகித்துவிடமுடியும்  அந்த பட்டியல்: ப்ரியா சகோதரிகள், காயத்ரி வெங்கட் ராகவன்,காயத்ரி கிரிஷ், பந்துலு  ரமா , சின்மயா சகோதரிகள்...   இந்த கோஷ்டியிலே குறைந்தது  இரண்டு டஜன் அடங்கலாம். ஆண்களில் சிக்கிம் குருசரண் உள்பட  சிலர் இதே ரீதியில் அரைச்ச மாவு! அதாவது பாஸ் மார்கிலேயே காலத்தை ஓட்டுபவர்கள். 


சீசன் தொடங்குவதற்கு முன்பேயே லண்டன் கச்சேரி ஒன்றில் 'மதுரகீதவாணி’ என்ற விருதை வாங்கி வந்துள்ள நித்யஸ்ரீ மகாதேவனுக்கு திருஷ்டி போல நாடு திரும்பியதும் முதல் கச்சேரியே கேன்சல். முதுகு சுளுக்காம்.

20171106140220720.jpeg

கடந்த ஆண்டை போலவே 'வானவில் பண்பாட்டுமையம்,  பாரதி பிறந்தநாள் விழாவை  கொண்டாடுகிறது. இம்முறை இதற்கென விசேஷமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வரும் பத்தாம் தேதி  வருகிறார். இசை அரசிகள், அரசர்கள் இவ்விழாவில் 'பாரதி பஞ்சரத்னம் ' பாடுகிறார்கள், ஒன்றாக அமர்ந்து!

சுவாரஸ்யங்கள் தொடரும்..  

 

­